அவ்ளோதான் நம்மள முடிச்சு விட்டாங்க போங்க.. OnePlus 15 கதறல்ஸ்.. அதே சிப்.. புது iQOO போன்.. புது Realme போன்!
இந்தியாவில் ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் முந்திக்கொண்டது தான். அதற்காக குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Qualcomm Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் உடன் அறிமுகமான ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போனுக்கு போட்டியே இல்லை என்று கூறிவிட முடியாது.
ஐக்யூ (iQOO) மற்றும் ரியல்மி (Realme) ஆகிய இரண்டு நிறுவனங்களும் இதே ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் உடனான தங்கள் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை, ஒன்பிளஸ் 15 க்கு போட்டியாக சீனாவில் அறிமுகம் செய்துள்ளன. இந்தியாவிலும் அறிமுகம் செய்ய உள்ளன.

1. ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro): இது இந்தியாவில் வருகிற நவம்பர் 20 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.
2. ஐக்யூ 16 (iQOO 15): இது இந்தியாவில் வருகிற நவம்பர் 26 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆனால் முன்பதிவுகள் ஆனது ரியல்மி ஜிடி 8 ப்ரோ அறிமுகமாகும் அதே நவம்பர் 20-ல் தொடங்கும்.
ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- 6.79-இன்ச் QHD+ (1440 x 3136 பிக்சல்ஸ்) AMOLED பிளெக்சிபில் டிஸ்பிளே
- 7000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 144ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 1.07 பில்லியன் கலர்ஸ்
- 508 பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 3200 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
- 100 சதவீதம் DCI-P3 கலர் கேமட்
- 100 சதவீதம் sRGB ஆதரவு
- குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- 16GB வரை LPDDR5X ரேம் மற்றும் 1TB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ட்ரிபிள் ரியர் கேமரா
- டூ ஆக்சிஸ் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS), 22மிமீ குவிய நீளம் கொண்ட 50-மெகாபிக்சல் (எப்/1.8) Ricoh GR ஆன்டி-கிளேர் ப்ரைமரி கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 120எக்ஸ் டிஜிட்டல் ஜூம் திறன்களை கொண்ட 200-மெகாபிக்சல் (எப்/2.6) டெலிஃபோட்டோ கேமரா
- 32 மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா
- 30 fps இல் 8கே வீடியோ ரெக்கார்டிங்
- ரியல்மி யுஐ 7.0 ஓஎஸ்
- டூயல் சிம்
- 7000mAh பேட்டரி
- 120W மற்றும் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.85-இன்ச் Samsung M14 AMOLED டிஸ்பிளே
- 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா
- 50-மெகாபிக்சல் (f/1.88) ப்ரைமரி சென்சார்
- 100x டிஜிட்டல் ஜூம் வரை வழங்கும் 50-மெகாபிக்சல் (f/2.65) பெரிஸ்கோப் சென்சார்
- 50-மெகாபிக்சல் (f/2.05) வைட்-ஆங்கிள் லென்ஸ்
- 32-மெகாபிக்சல் (f/2.2) செல்பீ கேமரா
- 7,000mAh பேட்டரி
- 100W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: பேஸிக் 12ஜிபி ரேம் + 246ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.72,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வங்கி சலுகையின் கீழ் ரூ.68,999 க்கு வாங்க கிடைக்கும். இதேபோல 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வங்கி சலுகையின் கீழ் ரூ.75,999 க்கு வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








