Relame ருத்ர தாண்டவம்.. ரூ.5000 ஆபர் விலையில் புது போன் விற்பனை.. 200MP கேமரா, 7000mAh பேட்டரி, 120W சார்ஜிங்!
ஒன்பிளஸ் 15 (OnePlus 15) மற்றும் ஐக்யூ 15 (iQOO 15) ஆகிய 2 மாடல்களுக்கும் போட்டியாக இந்தியாவில் அறிமுகமான ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று (நவம்பர் 25) முதல் தொடங்குகிறது.
ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை சலுகைகள்: ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன், இந்தியாவில் இன்று மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ரியல்மி இந்தியா இ-ஸ்டோர் (Realme India e-store) வழியாக விற்பனைக்கு வரும். இந்த ஸ்மார்ட்போன் ஆஸ்டன் மார்ட்டின் ரேசிங் கிரீன், டெய்ரி ஒயிட் மற்றும் அர்பன் ப்ளூ ஆகிய நிறங்களில் வாங்க கிடைக்கும்.

விலையை பொறுத்தவரை ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.72,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.78,999 க்கு வாங்க கிடைக்கும். கடைசியாக ஆஸ்டன் மார்ட்டின் ரேசிங் கிரீன் எடிஷனின் 16ஜிபி ரேம் + 512 ஜிபி ஆப்ஷன் ரூ.79,999 க்கு வாங்க கிடைக்கும்.
சலுகைகளை பொறுத்தவரை, ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் மீது ரூ.5,000 வங்கி தள்ளுபடி (ICICI, HDFC, SBI), 6 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ மற்றும் ஆன்லைன் வழியாக வாங்குபவர்களுக்கு இலவச டெக்கோ செட் ஆகியவைகள் கிடைக்கும். ட்ரீம் எடிஷன் ஆனது 12 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ ஆப்ஷனின் கீழ் வாங்க கிடைக்கும்.
ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள்:
- 6.79-இன்ச் QHD+ (1440 x 3136 பிக்சல்ஸ்) AMOLED பிளெக்சிபில் டிஸ்பிளே
- குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா
- 50-மெகாபிக்சல் (எப்/1.8) Ricoh GR ஆன்டி-கிளேர் ப்ரைமரி கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 120எக்ஸ் டிஜிட்டல் ஜூம் திறன்களை கொண்ட 200-மெகாபிக்சல் (எப்/2.6) டெலிஃபோட்டோ கேமரா
- 32 மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா
- 7000mAh பேட்டரி
- 120W மற்றும் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
இதே விலைக்கு (ரூ.72,999) ஏற்கனவே வாங்க கிடைக்கும் ஒன்பிளஸ் 15: இந்தியாவில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 246ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.72,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வங்கி சலுகையின் கீழ் ரூ.68,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வங்கி சலுகையின் கீழ் ரூ.75,999 க்கு வாங்க கிடைக்கிறது.
இதே விலைக்கு (ரூ.72,999 க்கு) நாளை அறிமுகமாகும் ஐக்யூ 15 ஸ்மார்ட்போன்: நாளை, அதாவது நவம்பர் 26 ஆம் தேதி அன்று ஐக்யூ 15 (iQOO 15) ஸ்மார்ட்போன் இந்தியாவிலும், உலக சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுவும் ஒன்பிளஸ் 15 மற்றும் ரியல்மி ஜிடி 8 ப்ரோ மாடலை போன்ற விலை நிர்ணயத்தை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிப்ஸ்டர் அபிஷேக் யாதவின் எக்ஸ் தள பதிவின்படி, அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் லிஸ்டிங் காணப்பட்டது. அதில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடனான பேஸிக் வேரியண்ட் ரூ.72,999 க்கும், 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஆப்ஷன் ரூ.79,999 க்கும் பட்டியலிடப்பட்டு இருந்தது.


Click it and Unblock the Notifications








