Home
Mobile

புது போன்னு சொல்லாதீங்க.. Realme-யின் முரட்டு போன்.. 200MP கேமரா, 100W சார்ஜிங், 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் அதன் பிராண்டின் கீழ் இதுவரை அறிமுகம் செய்திராத அளவிலான மிகவும் பிரீமியம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட உள்ளது. குறிப்பாக, இந்த ஸ்மார்ட்போனிற்காக ரியல்மி நிறுவனம் ஆனது 200எம்பி கேமராவை கையில் எடுத்துள்ளது. என்ன மாடல்? எப்போது அறிமுகம்? வேறு என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

ரியல்மி நிறுவனம் பல முக்கியமான மேம்படுகளுடன் தனது அடுத்த தலைமுறை ஃபிளாக்ஷிப் போனான ரியல்மி ஜிடி 8 ப்ரோவை (Realme GT 8 Pro) அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த லீக்ஸ் வழியாக இந்த ஸ்மார்ட்போனின் பற்றிய பல முக்கிய விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டு உள்ளன.

Realme-யின் முரட்டு போன்.. 200MP கேமரா, 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?

குறிப்பிட்ட லீக்ஸின் படி, ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட் உடன் வரும் மற்றும் இது 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவை பேக் செய்யும். இந்த கேமராவிற்காக சாம்சங் HP9 சென்சார் பயன்படுத்தப்படலாம். இதே சென்சார் தான் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோவிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கேமரா சென்சார் ஒரு பெரிய 1/1.4-இன்ச் அளவை கொண்டுள்ளது மற்றும் 4 x 4 பிக்சல் பின்னிங்கை ஆதரிக்கிறது, இது குறைந்த வெளிச்சத்தில் 2.24μm பிக்சல் அளவுடன் பிரகாசமான மற்றும் கூர்மையான 12-மெகாபிக்சல் படங்களை கேப்சர் செய்ய அனுமதிக்கிறது. இது இறுதி தயாரிப்புக்கு வந்தால், இந்த பிரிவில் மிகவும் சக்திவாய்ந்த டெலிஃபோட்டோ கேமராவாக இது இருக்கும்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 2கே ரெசல்யூஷன் உடனான ஒரு பிளாட் OLED பேனலை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் முந்தைய தலைமுறை மாடல் ஆனது 1.5கே ரெசல்யூஷனை ஆதரிக்கும் மைக்ரோ-குவாட்-கர்வ்டு OLED பேனலை கொண்டிருந்தது. ஆக இது ஒரு பெரிய மாற்றமாக இருக்கும்.

மேலும் அதன் முன்னோடியை போலவே, ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனும் அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் நீர்ப்புகாத பாடியை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது பேட்டரியை பொறுத்தவரை ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 100W சார்ஜிங்குடன் சுமார் 7,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

விலையை பொறுத்தவரை ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் மேம்படுத்தப்பட்ட வன்பொருளை சேர்ப்பதால், இதன் விலை சற்றே அதிகமாக இருக்கலாம். சீனாவில் இது 3,999 யுவானுக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலும் ரூ.60000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் தான் வரும். ஏனென்றால் ரியல்மி ஜிடி 7 ப்ரோ ரூ.55,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமானது!

கடந்த ஏப்ரல் மாதம் ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆக ரியல்மி 14டி 5ஜி (Realme 14T 5G) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 19,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.67-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 2100 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ்
- 180ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்ப்ளிங் ரேட்
- 6என்எம் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்

- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
- எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 45W SuperVOOC சார்ஜிங்கை ஆதரிக்கும் 6,000mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Realme GT 8 Pro Could be Brands Most premium flagship Phone Ever Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X