இந்த ஒத்த போனுக்கு மொத்தம் காலி.. 200MP கேமரா.. 120W சார்ஜிங்.. 7000mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த கேமரா பிரியர்களையும் தட்டித் தூக்கிய ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) ஸ்மார்ட்போனின் ஆஸ்டன் மார்ட்டின் எஃப்1 லிமிடெட் எடிஷன் (Aston Martin F1 Limited Edition) விற்பனை தேதி உறுதியாகி இருக்கிறது. 200 எம்பி கேமரா, ஓஎல்இடி டிஸ்பிளே, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 7000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் களமிறங்க இருக்கிறது. இந்த ஆஸ்டன் மார்ட்டின் எஃப்1 லிமிடெட் எடிஷனின் முழு பீச்சர்கள் மற்றும் பட்ஜெட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சீன மார்கெட்டில் ரியல்மி ஜிடி8 ப்ரோ ஸ்மார்ட்போன் களமிறங்கி மிகப்பெரும் வரவேற்பை பெற்றுவிட்டது. இந்த மாதத்தில் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. இந்த நேரத்தில் ஆஸ்டன் மார்ட்டின் எஃப்1 லிமிடெட் எடிஷனின் விற்பனை தேதியை ரியல்மி நிறுவனம் உறுதி செய்துள்ளது. இது ப்ரோ மாடலைவிட பீச்சர்களில் பட்டையை கிளப்புகிறது.

நவம்பர் 10ஆம் தேதி சீன மார்கெட்டில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஏற்கனவே, ரியல்மி ஜிடி 7 ஆஸ்டன் மார்ட்டின் எஃப்1 லிமிடெட் எடிஷன் (Realme GT 7 Aston Martin F1 Limited Edition) வெளியாகி வரவேற்பை பெற்றிருப்பதால், இந்த மாடலுக்கு எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இது ஆஸ்டன் மார்ட்டின் கிரீன் (Aston Martin Green) கலரில் கிடைக்க இருக்கிறது.
பிரீமியம் லுக்கில் டூயல்-விங்க் ஏரோடைனாமிக் டெக்ச்சர் கொடுக்கிறது. கஸ்டம் போன் கேஸ், கஸ்டம் சிம் எஜெக்டர் டூல் போன்றவை கிடைக்கிறது. அதேபோல கஸ்டமைஸ்டு யுஐ கிடைக்கிறது. எஃப்1 பூட் அனிமேஷன், சார்ஜிங் எஃபெக்ட்ஸ், ஸ்பெஷல் ஜிடி மோட் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இப்போது, கேமரா, டிஸ்பிளே, பேட்டரி போன்ற பீச்சர்களை பார்க்கலாம்.
ரியல்மி ஜிடி 8 ஆஸ்டன் மார்ட்டின் எஃப்1 லிமிடெட் எடிஷன் அம்சங்கள் (Realme GT 8 Pro Aston Martin F1 Edition Specifications): இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 7.0 (Realme UI 7.0) கிடைக்க இருக்கிறது. 6.79 இன்ச் (1440 x 3136 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவிஸ் 2K ரெசொலூஷன், 7000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்க இருக்கிறது. மேலும், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் டால்வி விஷன் கிடைக்க இருக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்க இருக்கிறது. மெயின் கேமராவில் ஆன்டி-கிளார் மட்டுமல்லாமல், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. டெலிபோட்டோவில் சாம்சங் எச்பி5 (Samsung HP5) சென்சார் மற்றும் 3X ஆப்டிகல் ஜூம் உள்ளது.
மேலும், 6X லாஸ்லெஸ் ஜூமிங் மற்றும் 120X ஹைபிரிட் ஜூமிங் கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. முன்னதாக வெளியான ப்ரோ மாடலில் 7000mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வந்தது. இந்த எஃப்1 எடிஷனில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7000mAh பேட்டரி வர இருக்கிறது. ரூ.40,000 பட்ஜெட்டில் வெளியாகலாம். இந்தியாவில் வெளியாவது உறுதியாகவில்லை.


Click it and Unblock the Notifications







