Home
Mobile

Realme தான் இனி இங்க ராஜா.. தட்டித்தூக்கும் விலையில் 7000mAh பேட்டரி, 120W சார்ஜிங், 50MP Ricoh GR கேமரா!

கடந்த சில நாட்களாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி ஜிடி 8 சீரிஸ் (Realme GT 8 Series) ஸ்மார்ட்போன்கள் இன்று அறிமுகமாகின. இந்த சீரிஸின் கீழ் ரியல்மி ஜிடி 8 (Realme GT 8) மற்றும் ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) என்கிற 2 மாடல்கள் அறிமுகம்செய்யப்பட்டுள்ளன.

இந்த சீரீஸின் ப்ரோ மாடல் ஆன ரியல்மி ஜிடி 8 ப்ரோவின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது குவால்காமின் பிளாக்ஷிப் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்டால் இயக்கப்படுகிறது. இது ஆர்1 எக்ஸ் கிராபிக்ஸ் சிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

Realme தான் இனி இங்க ராஜா.. தட்டித்தூக்கும் விலையில் 7000mAh பேட்டரி!

இந்த ஸ்மார்ட்போன் 144ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் உடனான 2கே ரெசல்யூஷன் கொண்ட டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது. கூடவே இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP69+IP68+IP66 ரேட்டிங்களையும் பெற்றுள்ளது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டுள்ளது.

ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள்:
- 6.79-இன்ச் QHD+ (1440 x 3136 பிக்சல்ஸ்) AMOLED பிளெக்சிபில் டிஸ்பிளே
- 7000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 144ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 1.07 பில்லியன் கலர்ஸ்

- 508 பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 3200 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
- 100 சதவீதம் DCI-P3 கலர் கேமட்
- 100 சதவீதம் sRGB ஆதரவு
- குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- 16GB வரை LPDDR5X ரேம் மற்றும் 1TB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்

- ட்ரிபிள் ரியர் கேமரா
- டூ ஆக்சிஸ் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS), 22மிமீ குவிய நீளம் கொண்ட 50-மெகாபிக்சல் (எப்/1.8) Ricoh GR ஆன்டி-கிளேர் ப்ரைமரி கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 120எக்ஸ் டிஜிட்டல் ஜூம் திறன்களை கொண்ட 200-மெகாபிக்சல் (எப்/2.6) டெலிஃபோட்டோ கேமரா

- 32 மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா
- 30 fps இல் 8கே வீடியோ ரெக்கார்டிங்
- ரியல்மி யுஐ 7.0 ஓஎஸ்
- டூயல் சிம்
- 7000mAh பேட்டரி
- 120W மற்றும் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: சீனாவில் ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸிக் 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.50,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது

இதே ஸ்மார்ட்போனின் 16GB ரேம் + 256GB ஆப்ஷன், 12GB ரேம் + 512GB ஆப்ஷன் மற்றும் 16GB ரேம் + 512GB ஆப்ஷன் முறையே சுமார் ரூ.53,000, ரூ.56,000 மற்றும் ரூ. 58,000 க்கும், ஹை-எண்ட் 16GB ரேம் + 1TB ஆப்ஷன் தோராயமாக ரூ.64,000 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் குறித்த சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட, இது கூடிய விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஒன்பிளஸ் 15, ஐக்யூ 15 ஆகிய ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்தான் உள்ளது. ஆக போட்டி காரணமாக இது விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும்.

ரியல்மி ஜிடி 8 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: சீனாவில் ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸிக் 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.36,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது

இதே ஸ்மார்ட்போனின் 16GB ரேம் + 256GB ஆப்ஷன், 12GB ரேம் + 512GB ஆப்ஷன் மற்றும் 16GB ரேம் + 512GB ஆப்ஷன் முறையே சுமார் ரூ.40,000, ரூ.42,000 மற்றும் ரூ. 45,000 க்கும், ஹை-எண்ட் 16GB ரேம் + 1TB ஆப்ஷன் தோராயமாக ரூ.51,000 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி ஜிடி 8 ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள்:
- 6.79-இன்ச் QHD+ (1440 x 3136 பிக்சல்ஸ்) AMOLED பிளெக்சிபில் டிஸ்பிளே
- 7000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 144ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 1.07 பில்லியன் கலர்ஸ்

- 508 பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 3200 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
- 100 சதவீதம் DCI-P3 கலர் கேமட்
- 100 சதவீதம் sRGB ஆதரவு
- குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- 16GB வரை LPDDR5X ரேம் மற்றும் 1TB வரை UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்

- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா (24மிமீ குவிய நீளம்)
- 8 மெகாபிக்சல் (எப்/2.2) அல்ட்ராவைடு கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.8) டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 16 மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா

- 30 fps இல் 8கே வீடியோ ரெக்கார்டிங்
- ரியல்மி யுஐ 7.0 ஓஎஸ்
- டூயல் சிம்
- 7000mAh பேட்டரி
- 120W மற்றும் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT 8 Pro and Realme GT 8 With 7000mAh Battery Launched Check Out Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X