அக்.21 கச்சேரி.. 8.20மிமீ ஸ்லிம் டிசைனில் 7000mAh பேட்டரி, 120W வயர்டு, 200MP கேமரா.. புது Realme போன்!
ரியல்மி (Realme) நிறுவனம் வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி அன்று, ரியல்மி ஜிடி 8 (Realme GT 8) மற்றும் Realme GT 8 Pro (ரியல்மி ஜிடி 8 ப்ரோ) ஆகிய 2 ஸ்மார்ட்போன்களை உள்ளடக்கிய ரியல்மி ஜிடி 8 சீரீஸை அறிமுகம் செய்யவுள்ளது.
அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களை பற்றிய முக்கிய விவரங்களை ரியல்மி நிறுவனம் "ஒவ்வொன்றாக" வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேட்டரி அளவு மற்றும் சார்ஜிங் திறன்கள் (Battery size and Charging capabilities ) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நினைவூட்டும் வண்ணம் கடந்த ஆண்டு வெளியான ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போன், 120W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 6,500mAh பேட்டரியுடன் வந்தது. இருப்பினும் அதில் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு இல்லை. ஒப்பிடுகையில் புதிய ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் உள்ளே பெரிய 7,000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது 120W வயர்டு சார்ஜிங்கைத் தவிர 50W வயர்லெஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கூடவே இந்த ஸ்மார்ட்போன் பைபாஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. 120W சார்ஜரை பயன்படுத்தி ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனை வெறும் 15 நிமிடங்களில் 0 முதல் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என்று ரியல்மி கூறுகிறது. பெரிய பேட்டரியை பேக் செய்தாலும், இது அளவீட்டில் 8.20மிமீ மட்டுமே உள்ளது, அதாவது இது அதன் முந்தைய தலைமுறை மாடலை விட மெலிதானது.
ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 6.78 இன்ச் பிளாட் OLED பேனல்
- 2 கே ரெசல்யூஷன்
- 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- அண்டர் டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- Android 16 அடிப்படையிலான Realme UI 7
- OIS ஆதரவு உடன் Ricoh-சான்றளிக்கப்பட்ட 1/1.56-இன்ச் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ்
- 200-மெகாபிக்சல் கேமரா (Samsung HP5 சென்சார்)
- Dolby Vision ஆதரவுடன் 4K 120fps வீடியோ ரெக்கார்டிங்
ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இந்தியாவில் இது ரூ.55,000 - ரூ.65,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்,21 நடக்கும் சீன அறிமுகத்தை தொடர்ந்து இது இந்தியாவிலும் அறிமுகமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால் ரியல்மி ஜிடி 7 ப்ரோ இந்தியாவில் அறிமுகமானது.
ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120 ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு
- டால்பி விஷன் மற்றும் எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு
- 6.78 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 16 ஜிபி வரை எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம்
- 512 ஜிபி வரையிலான யுஎப்எஸ் 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்906 ப்ரைமரி சென்சார்
- 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்882 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 8 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்355 அல்ட்ரா-வைட் கேமரா
- 16 மெகாபிக்சல் செல்பீ சென்சார்
- 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5800எம்ஏஎச் பேட்டரி
- இன் டிஸ்பிளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக ஐபி69 ரேட்டிங்
- அண்டர் வாட்டர் கேமரா மோட் (Under Water Camera Mode)
- அளவீட்டில் 162.45 x 76.89 x 8.55 மிமீ
- எடையில் சுமார் 222 கிராம்.


Click it and Unblock the Notifications








