மே.30 குறிச்சிக்கோங்க.. வெறும் ரூ.28,999 பட்ஜெட்ல 120W சார்ஜிங்.. 7000mAh பேட்டரி.. OIS கேமரா.. எந்த மாடல்?
ஜிடி பூஸ்ட் சப்போர்ட் கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 8400 மேக்ஸ் சிப்செட், 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி, சோனி ஐஎம்எக்ஸ் சென்சார் கொண்ட மெயின் கேமரா, ஆர்மர்ஷெல் கிளாஸ் புரொடெக்சன் கொண்ட டிஸ்பிளே போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், பின்னியெடுக்கும்படி பட்ஜெட் விலையில் ரியல்மி ஜிடி 7டி (Realme GT 7T) போன் களமிறங்கி இருக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கும் இந்த ரியல்மியின் விவரங்களை பார்க்கலாம்.
இந்தியாவில் வெளியாகி இருக்கும் இந்த ரியல்மி ஜிடி 7டி போனின் விற்பனையானது, மே 30ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அமேசான் தளத்தில் இன்று முதல் ப்ரீ-புக்கிங் செய்ய கிடைக்கிறது. இப்போது, புக்கிங் செய்தால், 1 வருடத்துக்கான ஸ்கிரீன் டேமேஜ் புரொடக்சன் கொடுக்கப்படுகிறது. இதுபோக பேங்க் டிஸ்கவுண்ட், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மற்றும் நோ-காஸ்ட் ஈஎம்ஐ வருகிறது.

ரியல்மி ஜிடி 7டி விலை (Realme GT 7T Price): 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.34,999ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.37,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.41,999ஆக இருக்கிறது.
இந்த விலையில் ரூ.3,000 பேங்க் டிஸ்கவுண்ட் அல்லது ரூ.6000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கொடுக்கப்படுகிறது. அதுவே ஜிடி யூசராக இருந்தால், கூடுதலாக ரூ.2000 ஆஃபர் கிடைக்க இருக்கிறது. இதுபோக 9 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையில் ஆர்டர் செய்து கொள்ள முடியும். ஆகவே, அதிகபட்சம் ரூ.6000 ஆஃபர் பெறும்பட்சத்தில் ரூ.28,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.
ரியல்மி ஜிடி 7டி அம்சங்கள் (Realme GT 7T Specifications): இந்த ரியல்மியில் ஆர்மர்ஷெல் கிளாஸ் (Armor Shell Glass) புரொடெக்சன் கொண்ட 6.78 இன்ச் (2780 x 1264) அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 360Hz டச் சாம்பிளிங் ரேட் + 2600Hz இன்ஸ்டன்ட் சாம்பிளிங் ரேட் உள்ளது.

கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 8400 மேக்ஸ் (Octa Core 4nm MediaTek Dimensity 8400 Max) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட்டில் மாலி ஜி720 ஜிபியு (Mali G720 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் 12 ஜிபிக்கான ரேம் பூஸ்ட் சப்போர்ட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) வருகிறது.
லாங்-லைப் பேட்டரி சிப் மற்றும் 5 ஸ்டார் பேட்டரி சர்டிபிகேஷன் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி மற்றும் அந்த பேட்டரிக்கு 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இவ்வளவு பெரிய பேட்டரியை வெறும் 42 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த ரியல்மி ஜிடி 7டி போனில் சோனி ஐஎம்எக்ஸ்896 சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.
ஓஐஎஸ் மற்றும் 8 எம்பி அல்ட்ரா-வைடு சப்போர்ட் கிடைக்கிறது. ஏஐ ஸ்னாப் டிராவல், போர்ட்ராய்டு ஸ்னாப் போன்ற பிரத்யேக கேமரா பீச்சர்கள் கிடைக்கின்றன. 32 எம்பி செல்பீ கேமரா மற்றும் ஆன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் உள்ளது. IP69 வாட்டர் ரெசிஸ்டன்ட், ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் வருகிறது. ரேசிங் எல்லோ, ஐஸ்சென்ஸ் கவருடன் பிளாக், ப்ளூ கலர்கள் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








