Home
Mobile

மிட்-ரேஞ்ச் பட்ஜெட் காலி.. 120W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 7000mAh பேட்டரி.. SONY கேமரா.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?

ரியல்மி பிரியர்களை மரண வெயிட்டிங் மோடில் போட்டுவைத்த ரியல்மி ஜிடி 7டி (Realme GT 7T) போனின் இந்திய வெளியீடு மற்றும் விற்பனை உறுதியாகியதை தொடர்ந்து, ரேம் மற்றும் மெமரி வேரியண்ட் மட்டுமல்லாமல், அவற்றின் விலை விவரங்களும் இப்போது மார்கெட்டில் வெளியாகி இருக்கின்றன. பிரீமியம் பீச்சர்களுடன் மிட்-ரேஞ்ச் செக்மெண்ட்டில் வெளியாக இருப்பதால், ரியல்மி பிரியர்கள் மட்டுமல்லாமல், கேமிங் பிரியர்களும் குஷியாகிவிட்டனர். இந்த ரியல்மி ஜிடி 7டி போனின் விவரங்கள் இதோ.

ரியல்மி ஜிடி 7டி மட்டுமல்லாமல், ரியல்மி ஜிடி 7 (Realme GT 7) மாடலும் வரும் மே 27ஆம் தேதி குளோபல் மார்கெட்டிலும், இந்திய மார்கெட்டிலும் வெளியாக இருக்கின்றன. இதனால், அந்த மாடல்களின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இதில் ரியல்மி ஜிடி 7டி மாடலானது ஒட்டுமொத்த கேமிங் பிரியர்களையும் கவர்ந்துள்ளது.

மிட்-ரேஞ்ச் பட்ஜெட் காலி.. 120W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 7000mAh பேட்டரி!

ஏனென்றால், வீகன் லெதர் டிசைன் மற்றும் பீச்சர்களும் கேமிங் பிரியர்கள் விரும்பும்படியே இருக்கிறது. இப்போது, விலை விவரங்களும் மார்கெட்டில் வெளியாகி இருக்கின்றன. இதன் மூலம் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் பிரீமியம் பீச்சர்களுடன் வெளியாக இருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த விலை விவரங்களை பார்த்துவிட்டு, பீச்சர்கள் மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ரியல்மி ஜிடி 7டி விலை (Realme GT 7T Price): 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.34,999 ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.37,999ஆகவும் இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.39,999ஆகவும் இருக்கிறது. இந்த விலை விவரங்கள் அதிகாரப்பூர்வமானவை அல்ல, மார்கெட்டில் கசிந்தவை மட்டுமே.

முன்னதாக இந்திய மார்கெட்டில் வெளியான ரியல்மி ஜிடி 6டி போனின் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.30,999ஆக இருந்தது. இப்போது, ரியல்மி ஜிடி 7டி மாடலின் ஆரம்ப விலை ரூ.35,000 பட்ஜெட்டில் இருக்கிறது. ஆகவே, அப்கிரேடட் பீச்சர்களுக்கு ஏற்பவே விலை இருப்பது தெரிகிறது.

Take a Poll

ரியல்மி ஜிடி 7டி அம்சங்கள் (Realme GT 7T Specifications): இந்த ரியல்மி போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) கிடைக்கிறது. ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8400 மேக்ஸ் எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 8400 Max SoC) சிப்செட் கிடைக்க இருக்கிறது. ஆகவே, கேமிங் பர்ஃபாமென்ஸ் பிரீமியமாக எதிர்பார்க்கலாம்.

இதற்கு ஏற்ப வேப்பர் கூலிங் சிஸ்டம், ஜிடி மோட் போன்ற பிரத்யேக கேமிங் பீச்சர்களும் கிடைக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. கேமிங் பிரியர்கள் விரும்பும் பேக்கப் கொடுக்கும்படி பெரிய 7,000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு சில நிமிடங்களில் சார்ஜ் செய்து கொள்ளும்படி 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. டூயல் கேமரா கிடைக்கிறது.

ஆகவே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் அதற்கு 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா செகண்டரியாக கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ ஷூட்டரை கொடுக்கிறது. மே 27ஆம் தேதி வெளியான பிறகு, அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. மேற்கண்ட பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்தவரை மட்டுமே.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT 7T With 8GB RAM To Launch in India Under Rs 35000 Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X