மொத்த மார்கெட்டும் அதிருது.. 120W சார்ஜிங்.. 7000mAh பேட்டரி.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த ரியல்மி பிரியர்களுக்கும் மே 27ஆம் தேதி முக்கியமான நாளாக இருக்கப் போகிறது. ஏனென்றால், ரியல்மி ஜிடி 7 (Realme GT 7) மட்டுமல்லாமல், டபுள் ட்ரீட்டாக ரியல்மி ஜிடி 7டி (Realme GT 7T) மாடலும் வெளியாக இருக்கிறது. இதை ரியல்மி இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ளது. பிரீமியம் கேமிங் பீச்சர்களை மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் கொடுக்க இருக்கும் இந்த மாடல்களின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
கடந்தாண்டு நவம்பர் மாத தொடக்கத்தில் சீன மார்கெட்டில் ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro) வெளியாகியது. மிட்-பிரீமியம் பட்ஜெட்டில் அல்ட்ரா பிரீமியம் பீச்சர்கள் கிடைத்ததால், இந்தியா உள்பட மற்ற மார்கெட்டிலும் எதிர்பார்ப்பு எகிறியது. அதைத்தொடர்ந்து, அதே நவம்பர் மாத இறுதியில் ரியல்மி ஜிடி 7 ப்ரோ போனானது இந்தியாவிலும் வெளியானது.

இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதத்தில் அதே சீன மார்கெட்டில் ரியல்மி ஜிடி7 போன் வெளியாகியது. இந்த போன் ப்ரோ மாடலைவிட கம்மியான பட்ஜெட்டில் வெளியாகியதால், இந்திய பிரியர்கள் இங்கு எப்போது வெளியாகும் என்று காத்திருந்தனர். இப்போது, அவர்களுக்கு டபுள் ட்ரீட்டாக ரியல்மி ஜிடி 7 மட்டுமல்லாமல், ரியல்மி ஜிடி 7டி போனும் வெளியாவது உறுதியாகி இருக்கிறது.
மே 27ஆம் தேதி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடக்கும் இவென்ட்டில் ரியல்மி ஜிடி 7 மற்றும் ரியல்மி ஜிடி 7டி மாடல்கள் வெளியாக இருக்கின்றன. அதே தேதியில் இந்திய மார்கெட்டில் வெளியாகும் என்றும் ரியல்மி இந்திய நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதனால், இந்தியாவில் இருக்கும் ரியல்மி பிரியர்கள் குஷியாகிவிட்டனர். இந்த போன்களின் பீச்சர்கள் எப்படி?
ரியல்மி ஜிடி 7 போனானது ஏற்கனவே சீன மார்கெட்டில் வெளியாகிவிட்டதால், அதே பீச்சர்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குளோபல் வேரியண்ட்டில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்க இருக்கிறது. சீன வேரியண்ட்டில் டூயல் கேமரா மட்டுமே கிடைத்தது, ஆகவே அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது தெரிகிறது. அதேபோல இதில் டைமன்சிட்டி 9400இ (Dimensity 9400e) சிப் வருகிறது.
டிரிபிள் ரியர் கேமராவை பொறுத்தவரையில், ஆப்டிகல் இமேஜ் ஸ்டபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக 50 எம்பி டெலிபோட்டோ கேமராவை கொடுக்கிறது. இந்த ரியல்மி ஜிடி 7 குளோபல் வேரியண்ட்டின் 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்க இருக்கிறது.

டிஸ்பிளே பீச்சர்கள் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, 1.5K ரெசொலூஷன் கொண்ட பிளாட் அமோலெட் டிஸ்பிளே எதிர்பார்க்கலாம். இந்த குளோபல் வேரியண்ட்டின் 120W சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. ஆனால், சீன வேரியண்ட்டில் 100W சார்ஜிங் கிடைத்தது. 7000mAh பேட்டரியை கொடுக்கிறது. IP69 ரேட்டிங் கிடைக்க இருக்கிறது.
ரியல்மி ஜிடி 7டி போனை பொறுத்தவரையில், டூயல் ரியர் கேமரா கொண்ட டிசைனில் கிடைக்க இருக்கிறது. அதேபோல வீகன் லெதர் போனலை கொடுக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 8400 (Dimensity 8400) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கிடைக்கிறது. முந்தைய மாடலை போலவே ரியல்மி யுஐ 6.0 கிடைக்க இருக்கிறது. பேட்டரி பீச்சர்களும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.
ஆகவே, 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7000mAh பேட்டரி வர இருக்கிறது. மேற்கண்ட பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்தவை மட்டுமே. அதிகார்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இந்தியாவில் மே 27ஆம் தேதி வெளியாகிறது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. வரும் நாட்களில் அதிகாரப்பூர்வ பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications








