Home
Mobile

மிரண்டு போன மார்க்கெட்.. 7000mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. வருகிறது புது ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி ஜிடி 7டி (Realme GT 7T) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய போன் வரும் மே 27-ம் தேதி அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அறிமுகத்திற்கு முன்பு ரியல்மி ஜிடி 7டி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ரியல்மி ஜிடி 7டி அம்சங்கள் (Realme GT 7T Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 8400 மேக்ஸ் (MediaTek Dimensity 8400 Max) சிப்செட் உடன் ரியல்மி ஜிடி 7டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். வீடியோ எடிட்டிங் ஆப் மற்றும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

மிரண்டு போன மார்க்கெட்.. வருகிறது புது ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் ரியல்மி ஜிடி 7டி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2,800 x 1,280 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 7டி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா வசதியும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.

7000mAh பேட்டரி உடன் ரியல்மி ஜிடி 7டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி யுஐ 6.0 சார்ந்த (Realme UI 6.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த ரியல்மி ஜிடி 7டி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)வசதியும் இந்த போனில் உள்ளது.

Take a Poll

வைஃபை 6, புளூடூத் 6.0, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரியல்மி ஜிடி 7டி ஸ்மார்ட்போனில் உள்ளது. பின்பு IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த ரியல்மி போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனின் எடை 205 கிராம் ஆகும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் விலையைப் பார்க்கலாம்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி 7டி போன் ரூ.34,999 விலையில் அறிமுகமாகும். பின்பு இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.37,999 விலையிலும், இதன் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.39,999 விலையிலும் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT 7T specifications, price and launch date revealed: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X