ப்பா என்னா பவரு.. 7200mAh பேட்டரி, 1TB மெமரி, 6 மணிநேர 120FPS கேமிங்.. இந்திய மார்க்கெட்டில் புது Realme போன்!
ரியல்மி நிறுவனம் அதன் 14டி 5ஜி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்த கையோடு, இன்னொரு புதிய ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்ய உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. அது ரியல்மி ஜிடி 7 (Realme GT 7) ஸ்மார்ட்போன் ஆகும். சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களுக்கு பிறகு இது இந்திய சந்தைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது
என்ன விலைக்கு வரும்? இந்திய சந்தைக்கான அதிகாரப்பூர்வ விலையை அறிவிக்கவில்லை என்றாலும், சீன விலை விவரங்கள் நமக்கு ஒரு ஐடியாவை தருகின்றன. சீனாவில் ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போனின் 12GB ரேம் மற்றும் 256GB ஆப்ஷன் தோராயமாக ரூ.30,400 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஐந்து வெவ்வேறு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது, டாப்-எண்ட் மாடல் - 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதன் விலை சுமார் ரூ.44,400 ஆகும். ஆக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், உள்ளூர் வரிகள் காரணமாக பேஸிக் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஷ் ஆப்ஷன் ரூ.40,000 என்கிற விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.
ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் FHD+ OLED டிஸ்பிளே
- 3என்எம் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9400+ சிப்செட்
- 16GB வரை LPDDR5X ரேம் மற்றும் 1TB வரை UFS 4.0 ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான Realme UI 6.0 ஓஎஸ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் 1/1.56-இன்ச் சோனி IMX896 ப்ரைமரி சென்சார் (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் -OIS)
- 8 மெகாபிக்சல் 112-டிகிரி அல்ட்ரா-வைட் ஷூட்டர்
- 16 மெகாபிக்சல் சோனி IMX480 செல்பீ கேமரா
- 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7,200mAh பேட்டரி
- கிராஃபீன் பூசப்பட்ட ஃபைபர் கிளாஸ் பின்புற பேனல் மேம்பட்ட வெப்ப கடத்துத்திறனை வழங்குவதாக கூறப்படுகிறது
- கூடவே 6 மணிநேரம் ஸ்டேபிள் 120 FPS கேம்பிளேவை gவழங்கும் என்றும் கூறப்படுகிறது
- இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக ஐபி69 ரேட்டிங்
ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போன் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது மற்றும் 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா யூனிட்டையும் கொண்டுள்ளது. இது 8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
மேலும் ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 256ஜிபி வரை பில்ட் இன் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது. ரியல்மி நிறுவனத்தின் கூற்றுப்படி, இது பிரிவின் பிரகாசமான AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 2100 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ்-ஐ வழங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66+IP668+IP69 ரேட்டிங்களையும் கொண்டுள்ளது.
ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 19,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் லைட்னிங் பர்பிள், அப்சிடியன் பிளாக் மற்றும் சர்ஃப் க்ரீன் (Lightning Purple, Obsidian Black, Surf Green) ஆகிய கலர்களில் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா இ-ஸ்டோர் வழியாக வாங்குவதற்கு கிடைக்கும். முதல் விற்பனை ஏப்ரல் 25 முதல் ஏப்ரல் 30 வரை நடக்கும்.


Click it and Unblock the Notifications








