Home
Mobile

SALE வெளுத்து கட்டுது.. ரூ.7,001 விலை குறைப்பு.. 7000mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. OIS கேமரா.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் ரியல்மி ஜிடி 7 (Realme GT 7) ஸ்மார்ட்போனின் விலை சத்தமில்லாமல் குறைக்கப்பட்டுள்ளது. 7000mAh பேட்டரி, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, அமோலெட் டிஸ்பிளே, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ஸ் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9400இ 4என்எம் சிப்செட் கொண்ட இந்த ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போனின் விலை, தள்ளுபடி மற்றும் முழு பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.39,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.42,999ஆகவும் இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.46,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் 8 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.32,998 பட்ஜெட்டில் கிடைக்கிறது.

SALE வெளுத்து கட்டுது.. ரூ.7,001 விலை குறைப்பு.. 7000mAh பேட்டரி!

இதுபோக ரூ.650 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.32,348 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். அதேபோல, ரூ.30,900 மதிப்பில் எக்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.35,998 பட்ஜெட்டிலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.39,998 பட்ஜெட்டிலும் கிடைக்கிறது. ஆகவே, நேரடி விலை குறைப்பில் வாங்கலாம்.

ரியல்மி ஜிடி 7 அம்சங்கள் (Realme GT 7 Specifications): இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9400இ 4என்எம் (Octa-Core MediaTek Dimensity 9400e 4nm) சிப்செட் மற்றும் இம்மார்டலிஸ் ஜி720 எம்சி12 ஜிபியு (Immortalis G720 MC12 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) உள்ளது.

3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. ஏஐ கிளார் ரீமூவல் (AI Glare Removal), ஏஐ லேண்ட்ஸ்கேப் (AI Landscape) போன்ற கேமரா பீச்சர்கள் கிடைக்கின்றன. இதுபோக அண்டர்வாட்டர் போட்டோகிராபி சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.

சோனி ஐஎம்எக்ஸ்906 (Sony IMX906) சென்சார் மற்றும் ஓஐஎஸ் (OIS) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 2X ஆப்டிகல் ஜூமிங் கொண்ட 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ஆர்மர் ஷெல் கிளாஸ் (Armor Shell Glass) புரொடெக்சன் கொண்ட 6.78 இன்ச் (2780 x 1264 பிக்சல்கள்) டிஸ்பிளே உள்ளது.

இந்த அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட், 6000 நிட்ஸ் பீக் பிரைடனஸ் மற்றும் 2600Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. இந்த ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போனில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7000mAh பேட்டரி கிடைக்கிறது. ஐஸ்சென்ஸ் பிளாக் மற்றும் ஐசென்ஸ் ப்ளூ ஆகிய கலர்களில் கிடைக்கின்றன.

சீன மார்கெட்டில் ரியல்மி ஜிடி 8 ஸ்மார்ட்போன் வெளியாகிவிட்டது. இதில் 6.79 இன்ச் (1440 x 3136 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. 7000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 3200Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் உள்ளது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் கிடைக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ உள்ளது. 120X ஹைபிரிட் ஜூமிங் உள்ளது. 7000mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35,850ஆக இருக்கிறது. இது சீன விலையாகும். இந்தியாவில் ஓரிரு வாரங்களில் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT 7 With 50MP Camera Available At Discounted Price in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X