மிட்-ரேஞ்ச் மிரளுது.. 7000mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. எந்த போன்?
360 டிகிரியில் கூலிங் கொடுக்கும்படியான ஐஸ்சென்ஸ் கிராஃபீன் (IceSense Graphene) பேனல் மட்டுமல்லாமல், 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 7000mAh பேட்டரி, சோனி சென்சார் கேமரா மற்றும் அமோலெட் டிஸ்பிளே போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் மிட்-ரேஞ்ச் விலையில் ரியல்மி ஜிடி 7 (Realme GT 7) வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9400இ சிப்செட் கொண்ட முதல் மாடலாக வெளியாகி இருக்கும் இந்த ரியல்மி ஜிடி 7 போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
அதிக பேட்டரி கேபாசிட்டி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டிருப்பதால், அதற்கான ஹார்ட்வேர் லெவல் சப்போர்ட் கிடைக்கின்றன. ஆகவே, 360 டிகிரியிலும் ஹீட் கன்ட்ரோல் கொடுக்கும்படி ஐஸ்சென்ஸ் கிராஃபீன் பாடி கவர் கிடைக்கிறது. இது பிளாஸ்டிக் பாடியைவிட 24 மடங்களுக்கு ஹீட் கன்ட்ரோல் கொடுக்கும். அதேபோல கிளாஸ் கவர்களைவிட 6 மடங்கு ஹீட் கன்ட்ரோல் கொடுக்கும்.

இதுபோக 7700மிமீ வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் கிடைக்கிறது. இந்த டிசைனில் ஆர்மர் ஷெல் கிளாஸ் (Armor Shell Glass) புரொடெக்சன் மற்றும் IP69 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. ஆகவே, பில்ட்-குவாலிட்டியில் பிரீமியம் மற்றும் டியூரபிலிட்டி எதிர்பார்க்கலாம். இப்போது, டிஸ்பிளே, கேமரா, பேட்டரி மற்றும் சிப்செட் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
ரியல்மி ஜிடி 7 அம்சங்கள் (Realme GT 7 Specifications): இந்த ஜிடி மாடலில் இம்மார்டலிஸ் ஜி720 ஜிபியு (Immortalis G720 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9400இ (Octa Core 4nm MediaTek Dimensity 9400e) சிப்செட் கிடைக்கிறது. நெக்ஸ்ட் ஏஐ (NEXT AI) பீச்சர்களுடன் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கிடைக்கிறது.
ஆகவே, ஏஐ பிளானர் (AI Planner) மற்றும் ஏஐ கேமிங் கோச் (AI Gaming Coach) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. கேமராவில் ஏஐ லேண்ட்ஸ்கேப் (AI Landscape), ஏஐ கிளார் ரிமூவர் (AI Glare Remover) மற்றும் ஏஐ எரைசர் போன்ற வழக்கமான பீச்சர்களும் கிடைக்கின்றன. 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.78 இன்ச் (2780 x 1264 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது.

இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2600Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 2600Hz டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 1.5K ரெசொலூஷன் கிடைக்கிறது. இந்த ஜிடி மாடலில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன.
சோனி ஐஎம்எக்ஸ்906 சென்சாரும், ஓஐஎஸ் டெக்னாலஜியும் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் சாம்சங் எஸ்5கேஜேஎன்5 சென்சாருடன் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இதுபோக 8 எம்பி வைடு-ஆங்கிள் கேமராவும் கிடைக்கிறது. 4K டால்பி விஷன் (Dolby Vision) ரெக்கார்டிங் கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்615 (Sony IMX615) சென்சாருடன் 32 எம்பி செல்பீ வருகிறது.
120W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், அதே பவர் கொண்ட சார்ஜர் கொடுக்கிறது. 7000mAh பேட்டரி கிடைக்கிறது. ஐஸ்சென்ஸ் பிளாக் (IceSense Black), ஐஸ்சென்ஸ் ப்ளூ (IceSense Blue) மட்டுமல்லாமல், ஆஸ்டன் மார்டின் கிரீன் (Aston Martin Green) கலரிலும் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.39,999ஆக இருக்கிறது.
மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.42,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.46,999ஆகவும் இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கிறது. ரூ.3000 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் 9 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை வருகிறது. மே 30ஆம் தேதி முதல் விற்பனை தொடங்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications








