Home
Mobile

சம்பவம் உறுதி.. மே.27 குறிச்சிட்டாங்க.. 7000mAh பேட்டரி.. 120W ஃபாஸ்ட் சார்ஜிங்.. ரியல்மி ஜிடி 7 சீரிஸ் ரெடி!

ரியல்மி ஜிடி 7 சீரிஸ் (Realme GT 7 Series) மாடல்களில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7000mAh பேட்டரி கொண்ட பேக்கப் சிஸ்டம் கிடைக்க இருப்பதை அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது. பிரீமியம் பேட்டரி டெக்னாலஜிகளுடன் குளோபல் மார்கெட் மற்றும் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கும் இந்த ரியல்மி ஜிடி 7 சீரிஸ் மாடல்களின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

மே 27ஆம் தேதி இந்த ரியல்மி ஜிடி 7 சீரிஸ் மாடல்கள் வெளியாக இருக்கின்றன. பாரிஸ் நகரில் வெளியீட்டு நிகழ்வு நடக்க இருக்கிறது. அதே நாளில் இந்திய மார்கெட்டிலும் இந்த ரியல்மி ஜிடி 7 சீரிஸ் வெளியாகும் என்று அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது. ரியல்மி ஜிடி 7 (Realme GT 7) மற்றும் ரியல்மி ஜிடி 7டி (Realme GT 7T) மாடல்கள் இதில் வெளியாக இருக்கின்றன.

சம்பவம் உறுதி.. மே.27 குறிச்சிட்டாங்க.. 7000mAh பேட்டரி.. 120W பாஸ்ட்!

இந்த வெளியீட்டு விவரங்கள் மற்றும் மாடல்களை மட்டுமே ரியல்மி நிறுவனம் அதிகார்பூர்வமாக உறுதி செய்திருந்தது. இருப்பினும், பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் விவரங்கள் மார்கெட்டில் கசிந்தன. இப்போது, ரியல்மி நிறுவனமே அதிகாரப்பூர்வமாக பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் விவரங்களை உறுதி செய்துள்ளது. ஆகவே, 7000mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது.

இந்த பேட்டரிக்கு 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வருகிறது. இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 40 நிமிடங்களில் 100 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம். ஒரு நாள் முழுவதும் ஹெவி யூசேஜ் செய்தாலும், பாதி பேட்டரி மட்டுமே தேவைப்படும் என்று ரியல்மி நிறுவனம் தெரிவிக்கிறது. இவ்வளவு பெரிய பேட்டரி கிடைப்பதால், அதற்கான டெக்னாலஜிகள் மற்றும் பீச்சர்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, மல்டி-செல் பேட்டரி கான்பிகான்பிகிரேஷன், ஏஐ டிரைவன் பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம் போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. ஏற்கனவே, ஐசென்ஸ் டெக்னாலஜி மற்றும் விசி கூலிங் சிஸ்டம் கிடைக்க இருப்பதை ரியல்மி நிறுவனம் உறுதி செய்திருந்தது. இப்போது, மேற்கண்ட பீச்சர்களை உறுதி செய்துள்ளது. ரியல்மி ஜிடி 7 மாடலில் 2 கலர்கள் கிடைக்க இருக்கின்றன.

சம்பவம் உறுதி.. மே.27 குறிச்சிட்டாங்க.. 7000mAh பேட்டரி.. 120W பாஸ்ட்!

ரியல்மி ஜிடி 7டி மாடலில் லெதர் பேனலுடன் ஒரே கலர் கிடைக்க இருக்கிறது. ஆகவே, ரியல்மி ஜிடி 7 மாடலில் ஐஸ்சென்ஸ் பிளாக் (IceSense Black) மற்றும் ஐஸ்சென்ஸ் ப்ளூ (IceSense Blue) கலர்கள் இருக்கின்றன. ஜிடி 7டி மாடலில் எல்லோ கலர் வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. இதில் ஜிடி 7டி மாடலிலேயே 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆகவே, ஜிடி 7 மாடலில் 100W சார்ஜிங் கிடைக்க வாய்ப்புள்ளது. இப்போது, மார்கெட்டில் கசிந்த பீச்சர்களை பார்க்கலாம். ரியல்மி ஜிடி 7டி மாடலில் ஆக்டா கோர் 3என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9400+ (Octa Core 3nm MediaTek Dimensity 9400+) சிப்செட் கிடைக்க இருக்கிறது. ஜிடி 7டி மாடலில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9400இ (Octa Core MediaTek Dimensity 9400e) வருகிறது.

இந்த 2 மாடல்களிலும் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0)மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) வருகிறது. ஜிடி 7டி மாடலில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் மற்றும் ஜிடி 7 மாடலில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. அமோலெட் டிஸ்பிளே மற்றும் கிரிஸ்டல் ஆர்மர் கிளாஸ் புரொடெக்சன் வருகிறது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT 7 Series With 7000mAh Battery 120W Fast Charging Confirmed Ahead May 27 Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X