மே 27 வரை வேற எந்த Phone-ம் வாங்கிடாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க.. Realme-யின் ரியல் சிங்கக்குட்டி!
ரியல்மி நிறுவனம் வருகிற மே 27 ஆம் தேதியன்று 2 புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்ய உள்ளது. அவைகள் - ரியல்மி ஜிடி 7 (Realme GT 7) மற்றும் ரியல்மி ஜிடி 7டி (Realme GT 7T) மாடல்கள் ஆகும்.
ரியல்மி நிறுவனம் அதன் சோஷியல் மீடியா சேனல்கள் மூலம் அதன் ஜிடி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை பற்றிய விவரங்களை தீவிரமாக வெளியிட்டு வரும் நிலையில், இவ்விரு ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன.

உறுதி செய்யப்பட்ட அம்சங்களை பொறுத்தவரை இரண்டு மாடல்களும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான AMOLED டிஸ்பிளேக்களை கொண்டிருக்கும். ரியல்மி ஜிடி 7டி மாடல் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 8400 மேக்ஸ் (MediaTek Dimensity 8400 Max) சிப்செட் கொண்டு இயங்கும். மறுகையில் உள்ள ரியல்மி ஜிடி 7 மாடல் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 9400இ (MediaTek Dimensity 9400e) சிப்செட்டை கொண்டிருக்கும்.
ரியல்மி ஜிடி 7டி மற்றும் ரியல்மி ஜிடி 7 என்ன அறிமுகம் செய்யப்படலாம்? ஒய்டெக்பி (Ytechb) வழியாக கிடைத்த அறிக்கை - ரியல்மி ஜிடி 7டி மற்றும் ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போன்களின் ஐரோப்பிய விலை விவரங்களை பரிந்துரைத்துள்ளது. அதன்படி ரியல்மி ஜிடி 7டி ஸ்மார்ட்போனின் ஆனது 12GB RAM + 512GB ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.67,000 க்கு அறிமுகமாகும்
மறுகையில் உள்ள ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போனின் ஆனது 12GB RAM + 512GB ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.77,000 க்கு அறிமுகமாகும். ரியல்மி ஜிடி 7டி மற்றும் ரியல்மி ஜிடி 7 ஆகிய 2 மாடல்களுமே ஐஸ்சென்ஸ் ப்ளூ (IceSense Blue) மற்றும் ஐஸ்சென்ஸ் பிளாக் (IceSense Black) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்?
- 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் FHD+ OLED டிஸ்பிளே
- 3என்எம் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9400+ சிப்செட்
- 16GB வரை LPDDR5X ரேம் மற்றும் 1TB வரை UFS 4.0 ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான Realme UI 6.0 ஓஎஸ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் 1/1.56-இன்ச் சோனி IMX896 ப்ரைமரி சென்சார் (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் -OIS)
- 8 மெகாபிக்சல் 112-டிகிரி அல்ட்ரா-வைட் ஷூட்டர்
- 16 மெகாபிக்சல் சோனி IMX480 செல்பீ கேமரா
- 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7,200mAh பேட்டரி
- கிராஃபீன் பூசப்பட்ட ஃபைபர் கிளாஸ் பின்புற பேனல் மேம்பட்ட வெப்ப கடத்துத்திறனை வழங்குவதாக கூறப்படுகிறது
- கூடவே 6 மணிநேரம் ஸ்டேபிள் 120 FPS கேம்பிளேவை gவழங்கும் என்றும் கூறப்படுகிறது
- இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக ஐபி69 ரேட்டிங்
ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்?
- 6.8-இன்ச் 1.5K LTPS AMOLED டிஸ்பிளே
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 6000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- மீடியாடிக் டைமன்சிட்டி 8400 மேக்ஸ் (MediaTek Dimensity 8400 Max) சிப்செட்
- 50 மெகாபிக்சல் சோனி IMX896 ப்ரைமரி சென்சார்
- 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா
- 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- அளவீட்டில் 162.42 x 75.97 x 8.25மிமீ
- எடையில் 202 கிராம்


Click it and Unblock the Notifications








