மார்க்கெட்டே மிரள போகுது.. சோனி கேமரா.. 100W சார்ஜிங்.. புது Realme 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் சிப்செட், 1.5கேடிஸ்பிளே, 6000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை பார்க்காலாம்.
ரியல்மி ஜிடி 7 ப்ரோ அம்சங்கள் (Realme GT 7 Pro specifications): சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 ( Snapdragon 8 Gen 4) சிப்செட் வசதியுடன் இந்த ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

இந்த ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு இந்த போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 1.5கே ரெசல்யூஷன் கொண்ட டிஸ்பிளேவைக் (1.5K resolution display) கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1800 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) மெயின் கேமரா + அல்ட்ரா வைடு கேமரா + டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போனின் கேமராக்கள் 3x ஆப்டிகல் ஜூம் ஆதரவைக் கொண்டுள்ளன. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன. அதேபோல் இந்த போனில் IP69 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistance) வருகிறது.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ரியல்மி ஜிடி 7 ப்ரோ போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

6000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (100W fast charging) வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, வைஃபை, ஜிபஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்த புதிய ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.40,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications