Home
Mobile

மார்கெட் காலி.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 120W சார்ஜிங்.. 24GB ரேம்.. 6500mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் அதிரும்படி ஓஎல்இடி டிஸ்பிளே, சோனி சென்சாருடன் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 6500mAh பேட்டரி, 24 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி மெமரி போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்கள் மட்டுமல்லாமல், இந்தியாவின் முதல் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் சிப்செட் உடன் ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro) வெளியாக இருக்கிறது. இப்போது, முக்கிய பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன.

இந்த ரியல்மி ஜிடி 7 ப்ரோ மாடலானது, வரும் நவம்பர் 4ஆம் தேதி வெளியாகிறது. முதலில் சீன மார்கெட்டிலும், அதன்பிறகு இந்திய மார்கெட்டிலும் வெளியாகிறது. நவம்பரிலேயே இந்தியாவில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வர இருப்பதும் உறுதியாகி இருக்கிறது. முதலில் ஏற்கனவே கசிந்த பீச்சர்களை பார்த்துவிடுவோம்.

மார்கெட் காலி.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 120W சார்ஜிங்.. 24GB ரேம்!

ரியல்மி ஜிடி 7 ப்ரோ அம்சங்கள் (Realme GT 7 Pro Specifications): இந்த ரியல்மியில் 6.78 இன்ச் (2780 × 1264 பிக்சல்கள்) எல்டிபிஓ ஓஎல்இடி (LTPO OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது.

மேலும், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் எஸ்ஓசி (Octa Core Snapdragon 8 Elite 3nm SoC) மற்றும் பக்கா கேமிங் அவுட்புட் கொடுக்கும் அட்ரினோ 830 ஜிபுயு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 12 ஜிபி ரேம், 16 ஜிபி ரேம் மற்றும் 24 ஜிபி ரேம் கொண்ட மாடல்கள் இருக்கின்றன.

அதேபோல 256 ஜிபி மெமரி, 512 ஜிபி மெமரி மற்றும் 1 டிபி மெமரி வருகிறது. ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜியும், டெலிபோட்டோவில் சோனி ஐஎம்எக்ஸ்882 (IMX882) சென்சாரும் உள்ளது.

இந்த ரியல்மி ஜிடி 7 ப்ரோ போனில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6500mAh பேட்டரி வருகிறது. இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Ultrasonic Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) கிடைக்கிறது. ஒயிட், டைட்டானியம் மற்றும் ஆரஞ்ச் கலர்களில் வருகிறது.

மேற்கண்ட பீச்சர்களில் ஸ்னாப்டிராகன் 8 எலைட், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மற்றும் 16 ஜிபி ரேம் ஆகியவை மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல குவாட் கர்வ்ட் ஓஎல்இடி டிஸ்பிளே மற்றும் விசி ஹீட் சிங்க் பீச்சர்களும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.இந்த அதிகாரப்பூர்வ பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்த பீச்சர்களாகவே இருக்கின்றன.

இதனால், மீதமுள்ள பீச்சர்களும் அப்படி இருக்க வாய்ப்புள்ளது. நவம்பர் 4ஆம் தேதி வெளியாக இருப்பதால், கேமரா, டிஸ்பிளே, பேட்டரி என்று அடுத்தடுத்த பீச்சர்கள் வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்பதில் சந்தேகமில்லை. இதன் விலை விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், ரூ.45,000 முதல் ரூ.55,000 பட்ஜெட்டில் இருக்க வாய்ப்புள்ளது. கம்மியாகவும் இருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT 7 Pro With Snapdragon 8 Elite 16GB RAM Launch on November 4 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X