Home
Mobile

மொத்தமாக முடிச்சு விட்ட Realme.. 6500mAh பேட்டரி, சோனி கேமரா, 120W சார்ஜிங், OLED பிளஸ் டிஸ்பிளே.. எந்த மாடல்

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro) ஸ்மார்ட்போனை இன்று சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அதேபோல் இந்த வரும் நவம்பர் 26-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ் 13 போனை விட மேம்பட்ட அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரியல்மி ஜிடி 7 ப்ரோ அம்சங்கள் (Realme GT 7 Pro Specifications): 6.78-இன்ச் ஒஎல்இடி பிளஸ் டிஸ்பிளே (OLED Plus display) உடன் இந்த புதிய ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2780×1264 பிக்சல்ஸ், 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டால்பி விஷன், 2600 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 2600 ஹெர்ட்ஸ் பிடபிள்யூஎம் டிம்மிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

மொத்தமாக முடிச்சு விட்ட ரியல்மி.. 6500mAh பேட்டரி, எந்த மாடல்?

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite)3என்ம் சிப்செட் உடன் ரியல்மி ஜிடி 7 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. மேலும் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த ரியல்மி போனை கேமிங் பயனர்கள் நம்பி வாங்கலாம்.

50எம்பி சோனி ஐஎம்எஸ்906 மெயின் சென்சார் (Sony IMX906 main sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரியல்மி ஜிடி 7 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன்.

இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி ஆகிய நான்கு வேரியண்ட்களில் இந்த போனை வாங்கலாம். மார்ஸ் ஆரஞ்சு (Mars Orange), ஸ்டார் டிரெயில் டைட்டானியம் (Star Trail Titanium), ஒயிட் நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்.

இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக்பிங்கர் பிரிண்ட் சென்சார் (In-display ultrasonic fingerprint sensor), இன்பிராரெட் சென்சார், யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res audio) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த ரியல்மி போனில் உள்ளன.

realme UI 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த ரியல்மி ஜிடி 7 ப்ரோ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் IP68+IP69 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்(Dust & Water Resistant) வசதியுடன் இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக முடிச்சு விட்ட ரியல்மி.. 6500mAh பேட்டரி, எந்த மாடல்?

ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஆனது ஒரு பெரிய 6500mAh பேட்டரி உடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11 பிஇ, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி, உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.

ரியல்மி ஜிடி 7 ப்ரோ விலை..
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி 7 ப்ரோ மாடலின் விலை 3699 yuan (இந்திய மதிப்பில் ரூ.43,840)
16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி 7 ப்ரோ மாடலின் விலை 3899 yuan (இந்திய மதிப்பில் ரூ.46,210)
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி 7 ப்ரோ மாடலின் விலை 3999 yuan (இந்திய மதிப்பில் ரூ.47,390)
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி 7 ப்ரோ மாடலின் விலை 4299 yuan (இந்திய மதிப்பில் ரூ.50,950)

Best Mobiles in India

English summary
Realme GT 7 Pro with OLED Plus display launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X