Home
Mobile

OnePlus-ஐ கதறவிடும் Realme.. அதே Snapdragon 8 Elite சிப்செட்.. பெட்டர் ஆன 6500mAh பேட்டரி.. OnePlus 13 க்ளோஸ்?

வழக்கத்தை விட கொஞ்சம் சீக்கிரமாக அறிமுகம் செய்யலாம்னு நினைச்சது ஒரு குத்தமா டா என்று ஒன்பிளஸ் நிறுவனம் வருத்தப்பட்டு கொண்டு இருந்தால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் இடம்பெறவுள்ள 4 முக்கிய அம்சங்களை வெளிப்படுத்துவதற்கு முன்பாக எல்லா விஷயங்களுமே ஒன்பிளஸ் 13-க்கு சாதகமாக தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் சில நாட்களில் எல்லாமே தலைகீழாக மாறியது போல் தெரிகிறது. ஐக்யூ, ஷாவ்மீ, ஹானர் போன்ற நிறுவனங்களை தொடர்ந்து ரியல்மி நிறுவனமும் ஒன்பிளஸ் 13-க்கு எதிரான ஆட்டத்தில் குதித்துள்ளது!

ரியல்மி நிறுவனம் அப்படி என்ன செய்கிறது? ரியல்மி நிறுவனம் 2 புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் வேலை செய்கிறது. ஒன்று - 2024 டிசம்பரில் அறிமுகமாக உள்ள ரியல்மி ஜிடி நியோ 7 ஸ்மார்ட்போன். இரண்டாவது - 2024 நவம்பர் மாத தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro) ஸ்மார்ட்போனாகும்.

Realme: அதே Snapdragon 8 Elite சிப்செட்.. OnePlus 13 க்ளோஸ்!

ரியல்மி ஜிடி 7 ப்ரோவின் அறிமுகம் மிகவம் நெருக்கமாக உள்ள நிலைப்பாட்டில் இந்த ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும் என்கிற தகவல் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. அப்படியாக டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த சமீபத்திய விவரங்கள் ஆனது, இந்த ஸ்மார்ட்போன் சில டாப்-நாட்ச் அம்சங்களை கொண்டிருக்கும் என்கிறது.

சுவாரசியமாக அந்த அம்சங்கள் எல்லாமே இம்மாதம் (2024 அக்டோபர்) அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 13-க்கு நேரடியாக சவால் விடும்படி உள்ளன. ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது எந்தவொரு ரியல்மி ஸ்மார்ட்போனிலும் இதுவரை கண்டிராத மிகப்பெரிய பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது 6500எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கும் என்றும், இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனும் கூட "இதேபோன்ற" வேலையை தான் செய்கிறது. அதன் பிளாக்ஷிப் மாடல்களில் இல்லாத அளவிற்கு ஒரு பெரிய 6000எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யவுள்ளது. ஆனால் ரியல்மி ஜிடி 7 ப்ரோ மாடலானது ஒன்பிளஸ் 13-ஐ விட பெரிய பேட்டரி கெப்பாசிட்டியை பெறவுள்ளது போல் தெரிகிறது.

இது மட்டுமல்ல ரியல்மி ஜிடி 7 ப்ரோ மாடலானது குவால்காமின் புதிய சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Quallcomm Snapdragon 8 Elite) எஸ்ஓசி-ஐ பேக் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே சிப்செட் தான் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனிலும் இடம்பெறவுள்ளது. இதோடு ரியல்மி ஜிடி 7 ப்ரோ VS ஒன்பிளஸ் 13-க்கான போட்டி முடிந்து விட்டது என்று எண்ண வேண்டாம். டிஸ்பிளேவில் தான் உண்மையான "யுத்தமே" நடக்கவுள்ளது.

ரியல்மி ஜிடி7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது சாம்சங்கின் கஸ்டம் டிஸ்பிளேவின் கீழ் சிறந்த கலர் பெர்ஃபார்மென்ஸை வழங்குவதோடு மட்டுமல்லாமல், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸை விஞ்சும் வகையில் உலகளாவிய டிசி டிமிங் ஐ ப்ரொடெக்ஷன் சொல்யூஷன் மற்றும் அதிநவீன கண் பாதுகாப்பு தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது.

ரியல்மி ஜிடி7 ப்ரோவின் டிஸ்பிளேவானது 2000 நிட்ஸ் க்ளோபல் பீக் பிரைட்னஸை உஆதரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவானது மைக்ரோ-குவாட்-கர்வ்டு வடிவமைப்பின் கீழ் 1.5கே ரெசல்யூஷனை ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது. மறுகையில் உள்ள ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் ரியல்மி ஜிடி 7 ப்ரோ டிஸ்பிளேவிற்கு "சற்றும் குறைவில்லாத" பிஓஇ எக்ஸ்2 டிஸ்பிளே இடம்பெறவுள்ளது. ஆக இரண்டில் "எது வின்னர்?" என்பது அறிமுகத்திற்கு பின்னரே தெரியவரும்.

கடைசியாக ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் சென்சார் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. இதுவும் கூட ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் "கிட்டத்தட்ட" உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ஒன்பிளஸ் 13 அறிமுகமான வேகத்தில் அதற்கு வெடி வைக்கும் அம்சங்களுடன் ரியல்மி ஜிடி 7 ப்ரோ அறிமுமாகும்.

ரியல்மி ஒருபக்கம் இருக்க, அக்டோபர் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ள ஹானர் மேஜிக் 7 சீரீஸில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் இடம்பெறுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல ஐக்யூ 13 (iQOO 13) மற்றும் ஷாவ்மீ 15 (Xiaomi 15) ஸ்மார்ட்போன்களும் கூட ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த சிப்செட் உடன் எந்த ஸ்மார்ட்போன் முதலில் அறிமுகமாகும் என்கிற கேள்விக்கான பதில் - வரும் நாட்களில் தான் கிடைக்கும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT 7 Pro Seems All Set to Take OnePlus 13 With Its Battery Chipset Display
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X