மார்கெட் அதிருது.. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்ல 16GB ரேம்.. 6500mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. OIS கேமரா.. எந்த மாடல்?
பெயருக்கு ஏத்த பீச்சர்கள் போல என்று அடித்து சொல்லும்படி அமோலெட் டிஸ்பிளே, 16 ஜிபி ரேம், சோனி ஐஎம்எக்ஸ் சென்சார் கேமரா, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 6500mAh பேட்டரி, IP68 & IP69 ரெசிஸ்டன்ட் மற்றும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் ரியல்மி ஜிடி 7 ப்ரோ ரேசிங் எடிஷன் (Realme GT 7 Pro Racing Edition) களமிறங்கி இருகிறது. இந்த ரியல்மி போனின் பீச்சர்கள், விலை விவரங்கள் இதோ.
ரியல்மி ஜிடி 7 ப்ரோ ரேசிங் எடிஷன் அம்சங்கள் (Realme GT 7 Pro Racing Edition Specifications): இந்த ரேசிங் எடிஷனில் ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு அல்ட்ரா பிரீமியம் அவுட்புட் கொடுக்கும்படி ஆக்டா கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Octa Core 3nm Snapdragon 8 Elite) சிப்செட் உள்ளது.

இதற்கு ஏற்ப அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த ரியல்மி போனில் 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.78 இன்ச் (2780 × 1264 பிக்சல்கள்) எல்டிபிஓ அமோலெட் (LTPO AMOLED) டிஸ்பிளே உள்ளது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2600Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 2600Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.
இந்த ரியல்மி போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. இதுபோக 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட் கிடைக்கிறது. ஆகவே, சிப்செட்டுக்கு ஏற்ப ரேம் வேரியண்ட்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
கேமராவில் பிரீமியம் சென்சார்கள் கிடைக்கின்றன. ஆகவே, சோனி ஐஎம்எக்ஸ்896 (Sony IMX896) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் சிஸ்டம் கிடைக்கிறது. சோனி சென்சாருடன் 16 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த ரியல்மி ரேஷிங் எடிஷன் கொடுக்கிறது.
ஃபுல் பாடி வாட்டர்ப்ரூஃப் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் கொடுக்கும்படி IP68 மற்றும் IP69 ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) போன்ற ஆடியோ பீச்சர்கள் கிடைக்கின்றன. கேமிங் பிரியர்களுக்கு இதைவிட பேக்கப் கொடுக்க முடியாது என்று சொல்லும்படி 6500mAh பேட்டரி மற்றும் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.
ரியல்மி ஜிடி 7 ப்ரோ ரேசிங் எடிஷன் விலை (Realme GT 7 Pro Racing Edition Price): இந்த ரியல்மி போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.36,835ஆக இருக்கிறது. அதேபோல 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.39,210ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.43,965ஆகவும் இருக்கிறது.
மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.59,420 ஆக இருக்கிறது. இப்போது சீனாவில் வெளியாகி இருக்கிறது. அங்கு இந்த பட்ஜெட் செக்மெண்ட்டில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்ட முதல் மாடலாக விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில் ரியல்மி ஜிடி 7 ப்ரோ விற்பனைக்கு கிடைக்கிறது. ரேசிங் எடிஷன் வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications








