Home
Mobile

மார்கெட் காலி.. OLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. 120W சார்ஜிங்.. 6500mAh பேட்டரி.. பிப்.13 இருக்கு.. எந்த மாடல்?

நெப்டியூன் எக்ஸ்ப்ளோரேஷன், ஸ்டார் டிரெய்ல் டைட்டானியம் ஆகிய கலர் வேரியண்ட்களில் ரியல்மி ஜிடி 7 ப்ரோ ரேசிங் எடிஷன் (Realme GT 7 Pro Racing Edition) வெளியாக இருக்கிறது. இந்த போனின் வெளியீடு பிப்ரவரி 13ஆம் தேதி நடக்கிறது. அல்டிமேட் பர்ஃபாமென்ஸ் மாடலாக வெளியாக இருக்கும் ரியல்மி ஜிடி 7 ப்ரோ ரேசிங் எடிஷனில் ஓஎல்இடி டிஸ்பிளே, 16 ஜிபி ரேம், 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 6500mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் வருகின்றன. இந்த ரியல்மியின் விவரங்கள் இதோ.

இந்திய மார்கெட்டில் பிரீமியம் செக்மெண்ட்டில் ரியல்மி ஜிடி 7 ப்ரோ வெளியாகி இருக்கிறது. டிஸ்பிளே, கேமரா, சிப்செட், பேட்டரி போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களிலும் மிரள விடுகிறது. இப்போது, இந்த ரியல்மி ஜிடி 7 ப்ரோவின் ரேசிங் எடிஷன் மாடல்கள் வெளியாக இருக்கின்றன. 2 கலர் வேரியண்ட்களில் வெளியாகிறது. முதலில் சீனாவில் களமிறங்குகிறது.

மார்கெட் காலி.. OLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. 120W சார்ஜிங்.. எந்த போன்?

பிப்ரவரி 13ஆம் தேதி சீன மார்கெட்டில் வெளியாக இருப்பதும், நெப்டியூன் எக்ஸ்ப்ளோரேஷன் எடிஷன் (Neptune Exploration Edition) மற்றும் ஸ்டார் ஸ்ட்ரெயில் டைட்டானியம் (Star Trail Titanium) ஆகிய கலர்களில் கிடைக்க இருப்பதும் உறுதியாகி இருக்கிறது. காஸ்மிக் விண்டோ டெக்கோ (Cosmic Window Deco) கேமரா டிசைன், மெட்டல் மிடில் ஃபிரேம் கிடைக்கிறது.

இதுபோக ஜீரோ ஸ்டோர்ம் ஏஜி டெக்னாலஜி (Zero Storm AG Technology) மற்றும் பேக் பேனலில் ஸ்டார் பேட்டர்ன் டெக்னாலஜி (Star Pattern Technology) கிடைக்கிறது. இந்த டிசைன் மற்றும் கலர் விவரங்களை மட்டுமே ரியல்மி நிறுவனம் உறுதி செய்துள்ளது. மற்ற பீச்சர்கள் மார்கெட்டில் ஏற்கனவே கசிந்துவிட்டன. அந்த பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்வோம்.

ரியல்மி ஜிடி 7 ப்ரோ ரேசிங் எடிஷன் அம்சங்கள் (Realme GT 7 Pro Racing Edition Specifications): இந்த ரியல்மி போனில் 6.78 இன்ச் (2780 × 1264 பிக்சல்கள்) ஓஎல்இடி பிளஸ் (OLED Plus) டிஸ்பிளே உள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. அல்ட்ரா பிரீமியம் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கும்படி சிப்செட் மற்றும் ஓஎஸ் பேக் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, இந்த போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite 3nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி யுஐ 6.0 (Ralme UI 6.0) வருகிறது. 12 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ரேம் வேரியண்ட்கள் கிடைக்க இருக்கிறது.

இந்த ரேம் வேரியண்ட்களுக்கு 256 ஜிபி மெமரி மற்றும் 512 ஜிபி மெமரி கிடைக்க இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கொண்ட டூயல் கேமரா கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. இந்த ரியல்மி ஜிடி 7 ப்ரோ ரேசிங் எடிஷன் போனில் 6500mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பெரிய பேட்டரிக்கு ஏற்ப 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது.

அல்ட்ராசோனிக் இன்டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட், இன்பிராரெட் சென்சார்கள் இருக்கின்றன. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ கிடைக்கிறது. இந்த ரியல்மி ஜிடி 7 ப்ரோ ரேசிங் எடிஷனின் விலை விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், ரூ.50000 பட்ஜெட்டில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. விலையில் சிறிது மாற்றம் இருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT 7 Pro Racing Edition To Launch on February 13 in China Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X