Realme தான் ராஜா.. தொக்கா ரூ.9009 விலை குறைப்பு.. 120W சார்ஜிங், IP69, 5800எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆக ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்த வேகத்தில் ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro) ஸ்மார்ட்போனின் விலை ரூ.9009 குறைக்கப்பட்டு உள்ளது.
ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் மீதான விலைக்குறைப்பு பிரபல இகாமர்ஸ் வலைத்தளங்கள் ஆன பிளிப்கார்ட் மற்றும் அமேசான் இந்தியாவில் மட்டுமே பிரதிபலிக்கிறது. அதாவது ரியல்மி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் ஆனது ரியல்மி ஜிடி 7 ப்ரோவை "இன்னமும்" அறிமுக விலையான ரூ.59,9999 க்கே விற்கிறது.

ஆனால் பிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது எந்த கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு அல்லது பேங்க் ஆபரும் இல்லாமல் ரியல்மி ஜிடி 7 ப்ரோவின் மீது ரூ.9009 நேரடி விலை குறைப்பை வழங்கி ரூ.50,990 க்கு விற்பனை செய்கிறது. மறுகையில் உள்ள அமேசான் இந்தியாவானது இதே ஸ்மார்ட்போனை ரூ.9001 நேரடி விலைகுறைப்பின் கீழ் ரூ.50,998 க்கு விற்கிறது.
இது ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாகும். நினைவூட்டும் வண்ணம் ரூ.59,999 க்கு அறிமுகமானது. தற்போது ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை தொடங்கியதும் தள்ளுபடியை பெற்று, குறைக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.78 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளே
- 120 ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு
- டால்பி விஷன்
- எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 16ஜிபி வரை எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம்
- 512ஜிபி வரையிலான யுஎப்எஸ் 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்906 ப்ரைமரி சென்சார்
- 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்882 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 8 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்355 அல்ட்ரா-வைட் கேமரா
- 16 மெகாபிக்சல் செல்பீ சென்சார்
- 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5800எம்ஏஎச் பேட்டரி
- இன் டிஸ்பிளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி69 ரேட்டிங்
- அளவீட்டில் 162.45 x 76.89 x 8.55 மிமீ
- எடையில் சுமார் 222 கிராம்
புதிய ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.79-இன்ச் QHD+ AMOLED பிளெக்சிபில் டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5
- 50-மெகாபிக்சல் (எப்/1.8) Ricoh GR ஆன்டி-கிளேர் ப்ரைமரி கேமரா
- 50-மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 200-மெகாபிக்சல் (எப்/2.6) டெலிஃபோட்டோ கேமரா
- 32-மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா
- 7000mAh பேட்டரி
- 120W சார்ஜிங்
ரியல்மி ஜிடி 7 ப்ரோ விலை விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.72,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.78,999 க்கு வாங்க கிடைக்கும். கடைசியாக ஆஸ்டன் மார்ட்டின் ரேசிங் கிரீன் எடிஷனின் 16ஜிபி ரேம் + 512 ஜிபி ஆப்ஷன் ரூ.79,999 க்கு வாங்க கிடைக்கும். சலுகைகளை பொறுத்தவரை, ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் மீது ரூ.5,000 வங்கி தள்ளுபடி (ஐசிஐசிஐ, எச்டிஎப்சி, எஸ்பிஐ) கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








