இந்த சான்ஸை விட்றாதீங்க.. ரக்டு ஆன Realme போன் மீது ரூ.15,000 நேரடி விலை குறைப்பு.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனமானது அதன் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனை, இன்னும் சில தினங்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ள நிலையில், முன்னதாக அறிமுகமான ரியல்மி ஜிடி 7 ப்ரோ மீது மிகப்பெரிய விலை குறைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது
தற்போது ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro) ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் மற்றும் அமேசான் இந்தியா ஆகிய இரண்டு இ-காமர்ஸ் தளங்களிலும் குறைக்கப்பட்ட விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் இது ரூ.44,996 முதல் வாங்க கிடைக்கிறது.

இது 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாகும். நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் அறிமுக விலை ரூ.59,999 ஆகும். ஆக பிளிப்கார்ட்டில் (Flipkart) ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.15,000 நேரடி விலை குறைப்பின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் ஆனது ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனை ரூ.50,999 க்கு விற்கிறது, அதாவது ரூ.9000 விலை குறைப்பின் கீழ் விற்கிறது.
ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120 ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு
- டால்பி விஷன்
- எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு
- 6.78 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 16ஜிபி வரை எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம்
- 512ஜிபி வரையிலான யுஎப்எஸ் 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்906 ப்ரைமரி சென்சார்
- 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்882 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 8 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்355 அல்ட்ரா-வைட் கேமரா
- 16 மெகாபிக்சல் செல்பீ சென்சார்
- 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5800எம்ஏஎச் பேட்டரி
- இன் டிஸ்பிளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக ஐபி69 ரேட்டிங்
- அளவீட்டில் 162.45 x 76.89 x 8.55 மிமீ
- எடையில் சுமார் 222 கிராம்
ரியல்மி ஜிடி 8 ப்ரோ இந்திய அறிமுகம், விலை மற்றும் அம்சங்கள்: இது வருகிற நவம்பர் 20 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இது ரூ.60,000-க்குள் என்கிற பட்ஜெட்டில், இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் ரூ.59,990-க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனானின் முக்கிய அம்சங்கள்:
- 1440 x 3136 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 7000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் - 1.07 பில்லியன் கலர்ஸ்
- 6.79-இன்ச் க்யூஎச்டி பிளஸ் அமோஎல்இடி பிளெக்சிபில் டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5
- 16ஜிபி வரையிலான LPDDR5X ரேம்
- 1டிபி வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 22 மிமீ ஃபோக்கல் லெங்த்,டூ-ஆக்சிஸ் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் (எப் /1.8) ரிக்கோ ஜிஆர் ஆன்டி-கிளேர் ப்ரைமரி கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 120 எக்ஸ் டிஜிட்டல் ஜூம் திறன்களை கொண்ட 200 மெகாபிக்சல் (எப்/2.6) டெலிஃபோட்டோ கேமரா
- 32 மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா
- 120W மற்றும் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 7000mAh பேட்டரி


Click it and Unblock the Notifications








