கேப்புல நடந்த கிடா வெட்டு.. OnePlus 13, iQOO 13-க்கு முன்பாகவே அறிமுகமாகும் Realme GT 7 Pro.. எப்போது?
ஸ்மார்ட்போன்களில் இடம்பெறும் சிப்செட்களின் மீது அதிக கவனம் செலுத்தாதவராக நீங்கள் இருந்தாலும் கூட.. கடந்த சில நாட்களாக ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) என்கிற பெயர் ஆங்காங்கே அடிபடுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். இது கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள குவால்காம் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் சிப்செட் ஆகும். இந்த சிப்செட்டை எந்த நிறுவனம் முதலில் பயன்படுத்த போகிறது? இந்த சிப்செட் உடன் முதலில் அறிமுகமாக போவது எந்த ஸ்மார்ட்போன்? என்கிற போட்டியின் விளைவாகவே - இந்த சிப்செட் மிகவும் பிரபலமாகி விட்டது.
முதலில் இந்த சிப்செட்.. 2024 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு ஸ்மார்ட்போனாக உருமாறியுள்ள ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மாடலில் இடம்பெறும் என்கிற தகவல் வெளியானது. பின்னர் இதே சிப்செட் ஐக்யூ 13 (iQOO 13) ஸ்மார்ட்போனில் இடம்பெறும் என்றும், இது ஒன்பிளஸ் 13-க்கு முன்பாகவே இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்றும் தகவல் வெளியானது.

இதன் மூலம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன் இந்திய சந்தையில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் என்கிற பெயர் - ஐக்யூ 13 மாடலுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரியல்மி 7 ஜிடி ப்ரோ (Realme GT 7 Pro) ஸ்மார்ட்போனானது அதற்கும் முன்பாக அறிமுகமாகி "ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை கொண்டிருக்கும் இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன்" என்கிற பெயரை தட்டிப்பறிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்மார்ட்பிரிக்ஸ் (Smartprix) மற்றும் டிப்ஸ்டர் யோகேஷ் ப்ரார் கூட்டணியில் வெளியான சமீபத்திய தகவலின்படி, ரியல்மி ஜிடி 7 ப்ரோ தான் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் பொருத்தப்பட்ட முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும். இது 2024 நவம்பர் மாத நடுப்பகுதியிலேயே இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். அதாவது டிசம்பர் 3 ஆம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ள ஐக்யூ 13 ஸ்மார்ட்போனுக்கு 2 வாரங்களுக்கு முன்னதாகவே அறிமுகமாகும்.
ஆனால் எப்படி பார்த்தாலும் ஹானர் மேஜிக் 7 சீரீஸ் தான் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன் உலகளவில் அறிமுகமான முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும். இந்த சீரீஸ் அக்டோபர் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதை தொடர்ந்தே ரியல்மி ஜிடி 7 ப்ரோ, ஐக்யூ 13 ஒன்பிளஸ் 13 மற்றும் ஷாவ்மீ 15 போன்ற ஸ்மார்ட்போன்கள் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன் அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது.
ரியல்மி ஜிடி 7 ப்ரோவின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இது இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஸ்மார்ட்போனாகவும் இருக்க அதிக வாய்ப்புள்ளது. இது விலை நிர்ணயம் ரூ.55,000 முதல் ரூ.60,000 க்குள் எங்காவது ஒரு புள்ளியில் அமரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மி ஜிடி 7 ப்ரோவில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த சமீபத்திய விவரங்களின்படி ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது எந்தவொரு ரியல்மி ஸ்மார்ட்போனிலும் இதுவரை கண்டிராத மிகப்பெரிய 6500எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கும் மற்றும் இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வரும்.
மேலும் ரியல்மி ஜிடி7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது சாம்சங்கின் கஸ்டம் டிஸ்பிளேவின் கீழ் சிறந்த கலர் பெர்ஃபார்மென்ஸை வழங்குவதோடு மட்டுமல்லாமல், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸை விஞ்சும் வகையில் உலகளாவிய டிசி டிமிங் ஐ ப்ரொடெக்ஷன் சொல்யூஷன் மற்றும் அதிநவீன கண் பாதுகாப்பு தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது.
ரியல்மி ஜிடி7 ப்ரோவின் டிஸ்பிளேவானது 2000 நிட்ஸ் க்ளோபல் பீக் பிரைட்னஸை உஆதரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவானது மைக்ரோ-குவாட்-கர்வ்டு வடிவமைப்பின் கீழ் 1.5கே ரெசல்யூஷனை ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது. கடைசியாக ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் சென்சார் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. (Source: https://www.smartprix.com/ and Yogesh Brar)


Click it and Unblock the Notifications








