நவம்பர் 4 உறுதி.. 6500mAh பேட்டரி.. சோனி கேமரா.. வருகிறது புதிய Realme 5ஜி போன்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro) ஸ்மார்ட்போனை வரும் நவம்பர் 4-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் சீனாவில் அறிமுகமான சில வாரங்களில் இந்தியா மற்றும் உலக நாடுகளில் அறிமுகம் செய்ய்படும் என்று கூறப்படுகிறது, தனித்துவமான வடிவமைப்புடன் இந்த போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ரியல்மி ஜிடி 7 ப்ரோ அம்சங்கள் (Realme GT 7 Pro Specifications): குவால்காமின் புதிய சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Quallcomm Snapdragon 8 Elite) உடன் ரியல்மி ஜிடி 7 ப்ரோ போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

6.78-இன்ச் மைக்ரோ-குவாட்-கர்வ்டு டிஸ்பிளே உடன் இந்த புதிய ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக 1.5கே ரெசல்யூஷன், 2000 நிட்ஸ் க்ளோபல் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
50எம்பி சோனி ஐஎம்எஸ்906 மெயின் சென்சார் (Sony IMX906 main sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரியல்மி ஜிடி 7 ப்ரோ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன்.
இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த ரியல்ம ஜடி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதி இந்த போனில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த ரியல்மி ஜிடி 7 ப்ரோ போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் IP69 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்(Dust & Water Resistant) வசதியுடன் இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ரியல்மி ஜிடி 7 ப்ரோ போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஆனது ஒரு பெரிய 6500mAh பேட்டரி உடன் வெளிவரும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இந்த ரியல்மி போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும்.
Photo Credit: Weibo/@Realme


Click it and Unblock the Notifications








