Home
Mobile

இது மொபைலா இல்ல நீர்முழ்கி கப்பலா? நீருக்கடியில் அன்பாக்சிங் செய்யப்பட்ட Realme GT 7 Pro.. போனுக்கு என்னாச்சு?

மக்கள் நம்பிக்கையை பெற முன்னணி நிறுவனமான ரியல்மி (Realme) எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லும் என்பதை நிரூபிக்க, யாரும் எதிர்பார்த்திடாத ஒரு நிகழ்வை செய்து காண்பித்துள்ளது. ரியல்மி நிறுவனம் இந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யவுள்ள புதிய ஸ்மார்ட்போன் சாதனம் தான் ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro) சாதனமாகும். இந்த Realme GT 7 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அறிமுகத்திற்கு முன்பாக இந்த போனின் தரம் எப்படி சிறந்தது என்பதை நிரூபிக்கும் வீடியோ ஆதாரம் தற்போது வெளியாகியுள்ளது.

இதுவரை நீங்கள் எத்தனையோ விதமான ஸ்மார்ட்போன்களின் அன்பாக்சிங் விடியோக்களை பார்த்திருக்கலாம். ஆனால், இப்படி ஒரு விசித்திரமான மற்றும் வினோதமான அன்பாக்சிங் வீடியோவை நீங்கள் பார்த்திருக்க முடியாது. காரணம், புதிதாக வெளிவரவிருக்கும் Realme GT 7 Pro ஸ்மார்ட்போன் சாதனத்தை நீருக்கடியில் ஒரு ஊடக குழு அன்பாக்சின் செய்து காண்பித்திருக்கிறது. இது தற்போது இணையம் முழுக்க வைரல் ஆகி பேசும்பொருளாகியுள்ளது.

இது மொபைலா இல்ல நீர்முழ்கி கப்பலா? நீருக்கடியில் அன்பாக்சிங்..

நீருக்கடியில் அன்பாக்சிங் செய்யப்பட்ட Realme GT 7 Pro.. போனுக்கு என்னாச்சு?

ஸ்பார்ரோவ் நியூஸ் (Sparrow News) மூலம் வெளியிடப்பட்ட ஒரு யூடியூப் வீடியோவில், ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro) ஸ்மார்ட்சாதனம் நீருக்கடியில் அன்பாக்சிங் செய்யப்பட்டுள்ளது. தெரியாதவர்களுக்கு, ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro) சாதனம் IP68 மற்றும் IP69 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பு அம்சத்துடன் வருவதாக நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது.

IP68 பெரும்பாலான ஸ்மார்ட்போன் சாதனங்களில் காணப்படும் ஒரு வழக்கமான பாதுகாப்பு அம்சத்தம் தான் என்றாலும் கூட, IP69 பாதுகாப்பு அம்சம் மிகவும் புதிதானது. இதற்கு முன்பு, இந்த அம்சத்தை கொண்டே ஒரே ஒரு போனாக உலகளவில் ஒப்போ எப்27 ப்ரோ பிளஸ் (OPPO F27 Pro+) மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. IP68 அம்சம் என்றால் என்ன?

IP69 பாதுகாப்பு அம்சமானது, போனை டஸ்ட் மற்றும் உயர் அழுத்தம் கொண்ட நீர் மற்றும் உயர் வெப்பநிலை கொண்ட வாட்டர் ஜெட் அழுத்தத்தை தாங்கக்கூடியது (high-pressure and high-temperature water jets) என்று கூறப்படுகிறது. இது போனுக்கு நீர் மற்றும் தூசியில் இருந்து மிகவும் உறுதியான பாதுகாப்பை வழங்குகிறது. இத்தகைய அம்சத்தை தான் ரியல்மி நிறுவனம் இப்போது அதன் புதிய ஸ்மார்ட்போனில் பயன்படுத்தியுள்ளது.

ரியல்மி ஜிடி 7 ப்ரோ போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் என்ன? (Expecting Specifications Of Realme GT 7 Pro):

இதன் பாதுகாப்பு தரத்தை சோதிக்கும் வகையில், யுடியூப் வீடியோவில் Realme GT 7 Pro சாதனம் முதலில் ஒரு நீச்சல்குளத்தில் தூக்கி எறியப்படுகிறது. பிறகு, அதை ஒரு பெண், நீருக்கடியில், எதோ ஒரு நீர்முழ்கி கப்பலை போல எடுத்துச்செல்லப்படுவதை காண்பிக்கிறது. அடுத்தபடியாக, Realme GT 7 Pro போனின் பாக்ஸ் நீருடக்கியில் திறக்கப்பட்டு, போனை முழுமையாக ஆன் நிலையில் நீருக்குள் வைத்தே காண்பிக்கிறது.

நீருக்கடியில் இந்த போன் வழக்கம் போல இயங்குவதை காண்பிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் புதிய சக்தி வாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 அல்லது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த போனில் 6.78'' இன்ச் 1.5K குவாட் மைக்ரோ வளைந்த டிஸ்பிளே, 16GB ரேம் உடன் 1TB ஸ்டோரேஜ் எதிர்பார்க்கப்படுகிறது.

இது 50MP + 8MP + 50MP கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 50MP EIS செல்பி கேமராவுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இது 6000mAh பேட்டரி உடன் 120W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை கொண்டிருக்குமென்று கூறப்பட்டுள்ளது. மிகவும் உறுதியான ஒரு போனை வாங்க விரும்பினால் இந்த போனை நீங்கள் கருத்தில்கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT 7 Pro IP69 Rating Smartphone Unboxed Underwater What Happened To The Phone At Last
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X