Realme ஒரே போன்ல செஞ்சுட்டான்யா.. நீரிலும் நிலத்திலும் இயங்கும் Mobile.. realme GT 7 Pro இன்று சேல்ஸ்.. விலை?
ரியல்மி (realme) நிறுவனம் அதன் புதிய ரியல்மி ஜிடி 7 ப்ரோ (realme GT 7 Pro) ஸ்மார்ட்போன் சாதனத்தின் விற்பனையை இன்று துவக்கியுள்ளது. இந்த பவர்ஃபுல் ஸ்மார்ட்போன் சாதனத்தில் பல அம்சங்களை ரியல்மி நிறுவனம் பேக் செய்துள்ளது. குறிப்பாக, இந்த போன் பல AI அம்சங்களை உள்ளடிக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ரியல்மி ஜிடி 7 ப்ரோ (realme GT 7 Pro) ஸ்மார்ட்போன் சாதனம் அண்டர் வாட்டர் அம்சத்தை கொண்டுள்ளது. இது நீருக்கடியில் இயங்கும் அம்சத்தை ஆதரிக்கிறது. இதன் விலை மற்றும் சிறப்பு சலுகை விபரங்களை இப்போது பார்க்கலாம்.
ரியல்மி ஜிடி 7 ப்ரோ (realme GT 7 Pro) ஸ்மார்ட்போன் சாதனம் 6.78" இன்ச் அளவு கொண்ட 2780×1264 பிக்சல் (pixels) உடைய ரியல் வோர்ட் ஈக்கோ OLED பிளஸ் (8T LTPO Real World Eco² OLED Plus display) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 1Hz முதல் துவங்கி 120Hz வரையிலான ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) ஆதரவை ஆதரிக்கிறது. இந்த டிஸ்பிளே 6000 நீட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ் (nits peak brightness) உடன் வருகிறது.

நீரிலும் நிலத்திலும் இயங்கும் புது ரியல்மி ஜிடி 7 ப்ரோ (realme GT 7 Pro):
இது 2600Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரெட் (instant touch sampling rate), டால்பி விஷன் (Dolby Vision), 120% DCI-P3 கலர் காமெட் (color gamut), 2600Hz ஹை-பிரிக்வேன்சி PWM டிமிங் ஆதரவு (high-frequency PWM dimming), முழு பிரைட்னஸ் டிசி டிம்மிங் (Full-brightness DC Dimming) போன்ற ஆதரவை இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே ஆதரிக்கிறது. இத்தகைய அம்சங்கள் மூலம் மிகவும் பிரகாசமான மற்றும் துல்லியமான டிஸ்பிளே அனுபவத்தை நீங்கள் பெற முடியும்.
இந்த புதிய ரியல்மி ஜிடி 7 ப்ரோ (realme GT 7 Pro) ஸ்மார்ட்போன் சாதனம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் எலைட் (4.32GHz Octa Core Snapdragon 8 Elite chipset) உடன் இயங்குகிறது. இந்த 3nm சிபிஸ்ட் உடன் 1100MHz அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) ஆதரவை இந்த டிவைஸ் கொண்டுள்ளது.
realme GT 7 Pro கேமரா மற்றும் ஸ்டோரேஜ் விபரம்:
இந்த ரியல்மி ஜிடி 7 ப்ரோ (realme GT 7 Pro) ஸ்மார்ட்போன் 12GB / 16GB LPDDR5X ரேம் (RAM) உடன் 256GB / 512GB UFS 4.0 ஸ்டோரேஜ் (storage) அம்சத்தை கொண்டுள்ளது. இந்த புதிய ரியல்மி ஜிடி 7 ப்ரோ (realme GT 7 Pro) ஸ்மார்ட்போன் சாதனம் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ரியல்மி யுஐ 6.0 (Android 15 with realme UI 6.0) இயங்குத்தளத்தில் இயங்குகிறது.
கேமரா அம்சத்தை பற்றி பேசுகையில், 50MP உடைய 1/1.56″ சென்சார் f/1.8 அபெச்சர் உடன் Sony IMX906 ரியர் கேமராவுடன் OIS ஆதரவை பெறுகிறது. 8MP அல்ட்ரா வைடு கேமரா (ultra-wide camera) f/2.2 அபெச்சரை பெறுகிறது. இதில் உள்ள மூன்றாவது கேமரா 50MP 1/1.95″ IMX882 சென்சார் உடன் 3x பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவாக (periscope telephoto camera), f/2.65 அபெச்சர் உடன் 120x ஹைபிரிட் ஜூம் (hybrid zoom) அம்சத்தை பெறுகிறது.
ரியல்மி ஜிடி 7 ப்ரோ விலை (realme GT 7 Pro Price):
ரியல்மி ஜிடி 7 ப்ரோ (realme GT 7 Pro) ஸ்மார்ட்போன் முன்பக்கத்தில் 16MP செல்பி கேமராவை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் (In-display ultrasonic fingerprint sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared sensor) போன்ற ஆதரவுகளுடன், இந்த ஸ்மார்ட்போன் டூயல் நானோ சிம் கார்டு (Dual SIM nano + nano) ஆதரவை கொண்டுள்ளது.
இது IP68+IP69 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பை கொண்டுள்ளது. இதில் USB Type-C ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர் (Stereo speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res audio) போன்ற ஆதரவுகளை இது பெறுகிறது. இதில் 5G SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்ஐ (Dual 4G VoLTE), Wi-Fi 7 802.11 be, ப்ளூடூத் (Bluetooth 5.4), GPS: L1+L5, GALILEO:E1+E5a, Beidou: B1I+B1C+B2a, QZSS:L1+L5, NFC, போன்ற பல ஆதரவுகளை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 5800mAh பேட்டரி (battery) உடன் 120W பாஸ்ட் சார்ஜிங்கை (fast charging) ஆதரிக்கிறது. இதன் விலை பற்றி பேசுகையில், realme GT 7 Pro (12GB+256GB) மாடல் ரூ. 56,999 விலையிலும், இதன் 16GB+512GB ஸ்டார்ஜ் மாடல் ரூ. 62,999 என்ற சலுகை விலையில் இன்று முதல் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications