ரூ.9000 ங்க.. முரட்டு Realme போன் மீது வெயிட்டு விலை குறைப்பு.. 16GB ரேம், 120W சார்ஜிங், 5800எம்ஏஎச் பேட்டரி!
ரியல்மி (Realme) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆகவும், ஒன்பிளஸ் 15 மற்றும் ஐக்யூ 15 ஆகிய மாடல்களுக்கு நேரடி போட்டியாகவும் ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) ஸ்மார்ட்போன் இன்று (நவம்பர் 20 ஆம் தேதி) இந்தியாவில் அறிமுகமானது.
புதிய மாடல் வெளியான வேகத்தில் பழைய ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது இது பிளிப்கார்ட் வலைதளத்தில் ரூ.50,990 முதலும், அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ரூ.50,998 முதலும் வாங்க கிடைக்கிறது.

மேற்குறிப்பிட்ட விலைகள் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாகும். நினைவூட்டும் வண்ணம் குறிப்பிட்ட ரேம் + ஸ்டோரேஜ் ஆப்ஷன் உடன் ரியல்மி ஜிடி 8 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டபோது, அதன் அசல் அறிமுக விலை ரூ.59,999 ஆக இருந்தது. ஆக பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இரண்டுமே ரூ.9000 வரையிலான நேரடி விலை குறைப்பை வழங்குகின்றன.
புதிய ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.72,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் அதே விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.78,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி ஜிடி 8 ப்ரோ உடன் சேர்ந்து ரியல்மி ஜிடி 8 ப்ரோ ட்ரீம் எடிஷனும் (Realme GT 8 Pro Dream Edition) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.79,999 முதல் தொடங்குகிறது.
இரண்டு மாடல்களுமே நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 29 ஆம் தேதி வரை வாங்க கிடைக்கும். அறிமுக சலுகைகளை பொருத்தவ்ரு ஆரம்பத்திலேயே வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச டெக்கோ செட், ரூ.5,000 வரை வங்கி தள்ளுபடி மற்றும் ஆறு மாத இஎம்ஐ விருப்பம் கிடைக்கும். ட்ரீம் எடிஷன் மீது எந்த தள்ளுபடியும் இல்லை. இருப்பினும், வாங்குபவர்கள் 12 மாத இஎம்ஐ திட்டத்தை தேர்வுசெய்யலாம்.
பழைய ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120 ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு
- டால்பி விஷன்
- எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு
- 6.78 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 16ஜிபி வரை எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம்
- 512ஜிபி வரையிலான யுஎப்எஸ் 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்906 ப்ரைமரி சென்சார்
- 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்882 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 8 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்355 அல்ட்ரா-வைட் கேமரா
- 16 மெகாபிக்சல் செல்பீ சென்சார்
- 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5800எம்ஏஎச் பேட்டரி
- இன் டிஸ்பிளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக ஐபி69 ரேட்டிங்
- அளவீட்டில் 162.45 x 76.89 x 8.55 மிமீ
- எடையில் சுமார் 222 கிராம்
புதிய ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள்:
- 6.79-இன்ச் QHD+ (1440 x 3136 பிக்சல்ஸ்) AMOLED பிளெக்சிபில் டிஸ்பிளே
- குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா
- 50-மெகாபிக்சல் (எப்/1.8) Ricoh GR ஆன்டி-கிளேர் ப்ரைமரி கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 120எக்ஸ் டிஜிட்டல் ஜூம் திறன்களை கொண்ட 200-மெகாபிக்சல் (எப்/2.6) டெலிஃபோட்டோ கேமரா
- 32 மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா
- 7000mAh பேட்டரி
- 120W மற்றும் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு


Click it and Unblock the Notifications








