Home
Mobile

மார்க்கெட்டே திணறப்போகுது.. 120W சார்ஜிங்.. சோனி கேமரா.. OLED டிஸ்பிளே.. வருகிறது புதிய ரியல்மி 5ஜி போன்..

ரியல்மி நிறுவனம் அடுத்து ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளன. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ரியல்மி ஜிடி 7 ப்ரோ அம்சங்கள் (Realme GT 7 Pro Specifications): 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்906 பிரைமரி கேமரா + 50எம்பி சோனி ஐஎம்எஸ்882 டெலிபோட்டோ லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என ட்ரிப்ளி ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

மார்க்கெட்டே திணறப்போகுது.. வருகிறது புதிய ரியல்மி 5ஜி போன்..

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் கேமரா பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல் நிறுவனம். எனவே சிறந்த கேமரா போனை வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த ரியல்மி ஜிடி 7 ப்ரோ போனை வாங்குவது நல்லது.

6.78-இன்ச் BOE ஒஎல்இடி டிஸ்பிளே (OLED display) வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட். 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

16ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் உடன் இந்த ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். குறிப்பாக இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) ஆதரவுடன் இந்த போன் அறிமுகாகும். அதேபோல் இந்த போனில் டூயல் ஸ்பீக்கர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எனேவ இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 (Snapdragon 8 Gen 4) சிப்செட் உடன் இந்த புதிய ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

மார்க்கெட்டே திணறப்போகுது.. வருகிறது புதிய ரியல்மி 5ஜி போன்..

6000mAh பேட்டரி உடன் ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11ஏஎக்ஸ், புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியாகும். அதேபோல் இந்த புதிய போன் சற்று உயர்வான விலையில் தான் விற்பனைக்கு வரும். ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் இருக்கும்.

photo credit: ceotech.it, 91mobiles

Best Mobiles in India

English summary
Realme GT 7 Pro camera details leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X