சலாம் ராக்கி பாய்.. தீபாவளி ஸ்பெஷல்.. ரூ.15000 டிஸ்கவுண்ட்.. 12GB ரேம், IP69, 120W சார்ஜிங், 5800mAh பேட்டரி!
அக்டோபர் 20 ஆம் தேதி உடன், அதாவது 2025 தீபாவளி பண்டிகை உடன் அமேசான் இந்தியா வலைத்தளத்தில் நடக்கும் தீபாவளி விற்பனையான - கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் (Amazon Great Indian Festival Sale) முடிவுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவராத்திரி தொடங்கிய இந்த சிறப்பு விற்பனையில் இதுவரையிலாக நீங்க எந்த ஸ்மார்ட்போனையுமே ஆபர் விலையில் வாங்கவில்லை என்றால்.. இதுவே உங்களுக்காக கடைசி சான்ஸ் ஆக இருக்கலாம். குறிப்பாக ரூ.1000, ரூ.2000 என்கிற சிறிய அளவிலான தள்ளுபடிகளுக்கு பதிலாக மேக டிஸ்கவுண்ட்-ஐ பெற்ற போன்களை வாங்க இதுதான் சரியான நேரம்!

அப்படியாக அமேசானில் மெகா டிஸ்கவுண்ட்டில் வாங்க கிடைக்கும் ஒரு ஸ்மார்ட்போன் தான் - ரியல்மி ஜிடி 7 ப்ரோ. வருகிற அக்.21 ஆம் தேதியன்று புதிய ரியல்மி ஜிடி 8 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளதால், பழைய மாடல் மீது மெகா டிஸ்கவுண்ட் கிடைப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
தற்போது அமேசானில் ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது - இந்தியாவில் அதன் அறிமுக விலையான ரூ.59,999 க்கு பதிலாக ரூ.15,000 தள்ளுபடியை பெற்று ரூ.44,998 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த ஆபர் ரியல்மி ஜிடி 7 ப்ரோவின் பிளாக் மற்றும் ஆரஞ்சு ஆகிய 2 கலர் ஆப்ஷன்கள் மீதுமே கிடைக்கிறது.
ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120 ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு
- டால்பி விஷன் மற்றும் எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு
- 6.78 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 16 ஜிபி வரை எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம்
- 512 ஜிபி வரையிலான யுஎப்எஸ் 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்906 ப்ரைமரி சென்சார்
- 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்882 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 8 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்355 அல்ட்ரா-வைட் கேமரா
- 16 மெகாபிக்சல் செல்பீ சென்சார்
- 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5800எம்ஏஎச் பேட்டரி
- இன் டிஸ்பிளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக ஐபி69 ரேட்டிங்
- அண்டர் வாட்டர் கேமரா மோட் (Under Water Camera Mode)
- அளவீட்டில் 162.45 x 76.89 x 8.55 மிமீ
- எடையில் சுமார் 222 கிராம்
ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இந்த ஸ்மார்ட்போனில் இன்டர்சேஞ்சபிள் ரியர் கேமரா யூனிட், ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 2கே 10-பிட் LTPO BOE பிளாட் OLED டிஸ்பிளே ஆகிய அம்சங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில் ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 200 மெகாபிக்சல் 1/1.56-இன்ச் சாம்சங் எச்பி5 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஷூட்டர் பொருத்தப்பட்டிருக்கும் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் இதன் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் 50-மெகாபிக்சல் 1/1.4-இன்ச் சோனி LYT-808 ப்ரைமரி (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) மற்றும் 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் பெரிய 7,000mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








