இந்த விலைக்கு இப்படி ஒரு Phone-ஆ.. ஏப்.23 அறிமுகத்திற்கு முன் Realme GT 7 முக்கிய அம்சங்கள் அறிவிப்பு!
ரியல்மி நிறுவனம் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அது ரியல்மி ஜிடி 7 (Realme GT 7) மாடல் ஆகும். ஏப்ரல் 23 சீன அறிமுகத்தை தொடர்ந்து கூடிய விரைவில் இது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால் ரியல்மி ஜிடி 6 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது
முன்னதாக ரியல்மி நிறுவனம் அதன் ஜிடி 7 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் கலர் ஆப்ஷன்களை உறுதிப்படுத்தி இருந்தது. தற்போது அறிமுகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஜிடி 7 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தும் கூடுதல் டீஸர்களை பகிர்ந்துள்ளது. இதில் டிஸ்பிளே விவரங்கள், கனெக்டிவிட்டி மற்றும் பல விவரங்கள் அடங்கும்.

ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போனில் உறுதிப்படுத்தப்பட்ட அம்சங்கள்: ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போன் அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனருடன் வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது விரைவான அன்லாக்கிங் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பை வழங்கும்.
மேலும் ரியல்மி ஜிடி 6 ஸ்மார்ட்போனில் உள்ள கர்வ்டு பேனலுக்கு பதிலாக ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போனியோல் ஒரு பிளாட் டிஸ்பிளே இடம்பெறும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கிரிஸ்டல் ஆர்மர் கிளாஸால் பாதுகாக்கப்படுவதாக கூறப்படுகிறது, இது கீறல்களை எதிர்க்கும். கூடவே இந்த ஸ்மார்ட்போன் ஐபி69 சான்றளிக்கப்பட்டதாகவும் இருக்கும்.
மேலும் ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போன் ஆனது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1.5கே ரெசல்யூஷன், 6500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் 4608ஹெர்ட்ஸ் ஹை ப்ரெக்வன்சி PWM டிம்மிங் இடம்பெறும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கேமிங்கின் போது, திசைக்கு ஏற்ப ரெஸ்பான்ஸ் செய்யும் 4டி வைப்ரேஷன் அம்சத்தை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இது அதிவேக கேமிங் அனுபவத்தை வழங்கும்
கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் எக்ஸ் ஆக்சிஸ் லீனியர் மோட்டார், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டூயல் ப்ரெக்வன்சி ஜிபிஎஸ், இன்ப்ரா ரெட் சென்சார் மற்றும் 360-டிகிரி NFC ஆதரவு ஆகியவற்றையும் கொண்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ரூ.40,000 க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இதெல்லாம் ஒருபக்கம் 2025 அக்டோபரில் குவால்காம் (Qualcomm) நிறுவனம் அதன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்பை (Snapdragon 8 Elite 2 chip) வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல பிராண்டுகள் இந்த புதிய சிப்பை உள்ளடக்கிய தங்கள் பிளாக்ஷிப் போன்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் ரியல்மி நிறுவனமும் சேர்ந்துள்ளதாக தெரிகிறது.
நினைவூட்டும் வண்ணம் கடந்த நவம்பர் 2024 இல் அறிமுகமான ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro) ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்பை (Snapdragon 8 Elite chip) பேக் செய்தது. ஆக ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் "அதே நேரத்தில்" அறிமுகமாக வாய்ப்புள்ளது. மேலும் டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக கிடைத்த தகவலின் படி இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட் கொண்டு இயங்கும்.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2கே ரெசல்யூஷன் (2K Resolution) உடனான ஒரு பிளாட் ஆன ஓஎல்இடி டிஸ்பிளேவை (Flat OLED Display) கொண்டிருக்கும் என்றும், இது அதன் முன்னோடியை போலவே, அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-screen fingerprint sensor) உடன் வரும் என்றும் டிப்ஸ்டர் கூறியுள்ளார் .
கேமராக்களை பொறுத்தவரை ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா செட்டப்பில் 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா (200 megapixel periscope telephoto camera) இருக்கும் என்றும், இந்த ஸ்மார்ட்போன் மெட்டல் மிடில் பிரேம் -ஐ கொண்டிருக்கும் என்றும், இது 100W சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும், பேட்டரியைப் பொருத்தவரை இது 7000mAh க்கும் குறைவாக இருக்காது என்று டிப்ஸ்டர் வெளிப்படுத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications








