விட்டா கிடைக்காது ப்ரோ.. ரூ.5,000 விலை குறைப்பு.. 7000mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி ஃபெஸ்டிவ் டேஸ் விற்பனையில் (Realme Festive Days Sale) 7000mAh பேட்டரி, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா மற்றும் அமோலெட் டிஸ்பிளே போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்களை கொண்ட ரியல்மி ஜிடி 7 (Realme GT 7) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இப்போது, ரூ.5,000 டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கிறது.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.39,999ஆக இருக்கிறது. இப்போது, ரியல்மி இந்திய தளத்தில் ரூ.5,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.34,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இதுபோக ரூ.5,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. இப்போது பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ரியல்மி ஜிடி 7 அம்சங்கள் (Realme GT 7 Specifications): 6.78 இன்ச் (2780 x 1264 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 6000 நிட்ஸ் பீக் பிரைடனஸ் கிடைக்கிறது. மொத்தமாக ஆர்மர் ஷெல் கிளாஸ் (Armor Shell Glass) புரொடெக்சன் கொடுக்கிறது.
மேலும், 2600Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் டிசிஐ பி3 கலர் காமட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9400இ 4என்எம் (Octa-Core MediaTek Dimensity 9400e 4nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட் செக்மெண்ட்டில் ஒட்டுமொத்த பேட்டரி மாடல்களையும் தூக்கி சாப்பிட்டுள்ளது.
ஏனென்றால், இதில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 7000mAh பேட்டரி கிடைக்கிறது. ஆகவே, அதிகப்படியான கேபாசிட்டி மட்டுமல்லாமல், அதை அதிவேகமாக சார்ஜ் செய்து கொள்ளும்படி ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உறுதி செய்யப்படுகிறது. கேமிங் மற்றும் கேமரா ஏஐ பீச்சர்களுடன் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கிடைக்கிறது.
இதுபோன்ற அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடல்களில் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் பிரமாதமாக இருக்காது. ஆனால், இந்த ரியல்மி ஜிடி 7 மாடலில் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant ) கிடைக்கிறது. டிஸ்பிளே, சிப்செட், பேட்டரி மட்டுமல்லாமல், கேமராவிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது.
இந்த ரியல்மி மாடலில் சோனி ஐஎம்எக்ஸ்906 (Sony IMX906) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜியும் கிடைக்கிறது. இதுபோக 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 50 எம்பி டெலிபோட்டோ கேமராவை கொடுக்கிறது.
இந்த டெலிபோட்டோவில் 2X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. டால்பி விஷன் ( Dolby Vision) மற்றும் 4K ரெசொலூஷனில் வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். இந்த ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போனில் 32 எம்பி செல்பீ கேமரா பேக் செய்யப்பட்டுள்ளது.
மிட்-ரேஞ்ச் மாடல்களில் கிடைக்கும் இன்-டிஸ்பிளே ஆஃப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கிடைக்கிறது. ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ கனெக்டிவிட்டி உள்ளது.


Click it and Unblock the Notifications