Home
Mobile

Realme ருத்ர தாண்டவம்.. 203 கிராமில் 7200mAh பேட்டரி, டைமன்சிட்டி 9300+ சிப், 12GB ரேம், 100W சார்ஜிங்!

ரியல்மி (Realme) நிறுவனம் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி அன்று புதிய மீடியாடெக் டைமன்சிட்டி 9400 பிளஸ் சிப்செட்டை கொண்ட ரியல்மி ஜிடி 7 (Realme GT 7) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. சீனாவை தொடர்ந்து இது நிச்சயம் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று நாங்கள் கூறியிருந்த நிலையில், ரியல்மி ஜிடி 7 இந்தியன் வேரியண்டின் (Realme GT 7 Indian Variant) சிப்செட் விவரங்கள் கீக்பெஞ்ச் தரவுத்தளம் வழியாக வெளியாகியுள்ளன.

எக்ஸ்பெர்ட்பிக் (Xpertpick) மூலம் பகிரப்பட்டுள்ள, கீக்பெஞ்ச் தரவுத்தளத்தின்படி, ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள்-கோர் மற்றும் மல்டி-கோர் சோதனைகளில் முறையே 2078 மற்றும் 7037 புள்ளிகளை பெற்றுள்ளது. இது 3.40GHz இல் ஒரு கோர், 2.85GHz இல் மூன்று கோர்கள் மற்றும் 2.0GHz இல் நான்கு கோர்களுடன் ஆக்டா-கோர் எஸ்ஓசி-ஐ கொண்டிருக்கும்.

Realme: 203 கிராமில் 7200mAh பேட்டரி, டைமன்சிட்டி 9300+ சிப்!

சோர்ஸ் கோட் ஆனது இந்த சிப்செட் மாலி-ஜி720 இம்மார்டலிஸ் எம்சி12 ஜிபியு உடன் இணைக்கப்படும் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த விவரங்கள் - இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போன் ஆனது பிளாக்ஷிப் மீடியாடெக் டைமன்சிட்டி 9300 பிளஸ் (MediaTek Dimensity 9300 Plus) சிப்செட் மூலம் இயக்கப்படும் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. இந்த சிப்செட் 12ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டு, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ நேரடியாக இயக்கும் என்றும் வெளியான லிஸ்டிங் கூறுகிறது.

சீன அறிமுகம் மிகவும் நெருக்கமாக இருக்கும் நிலையில், ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போனின் பல முக்கிய அம்சங்கள் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இது 100W பாஸ்ட் சார்ஜிங் உடனான 7200mAh பேட்டரி உடன் வரும் என்பதை ரியல்மி நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. பெரிய அளவிலான பேட்டரியை செய்தாலும் கூட, இந்த ஸ்மார்ட்போன் 8.25மிமீ என்கிற அளவிலான மிகவும் ஸ்லிம் ஆன டிசைனையும் மற்றும் எடையில் 203 கிராமும் மட்டுமே இருக்கும் என்பதையும் ரியல்மி உறுதிப்படுத்தியுள்ளது.

ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது பிஓஇ-ஆல் தயாரிக்கப்பட்ட ஓஎல்இடி பேனலை கொண்டிருக்கும். அது 1.5கே ரெசல்யூஷன், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் வரும். கேமராக்களை பொறுத்தவரை இது ஓஐஎஸ் ஆதரவு உடன் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமராவை பேக் செய்யலாம்

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஐபி68 / ஐபி69 ரேட்டிங் உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பெறலாம். முன்னரே குறிப்பிட்டப்படி இது எடையில் 203 கிராம் மற்றும் 8.25 மிமீ ஸ்லிம் டிசைனை பெறலாம். பேட்டரியை பொறுத்தவரை 100W வயர்டு சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் ஆதரவு உடனான பெரிய 7,200mAh பேட்டரியை கொண்டிருக்கலாம். விலையை பொறுத்தவரை இது ரூ.35,000 - ரூ.40,000 க்குள் அறிமுகம் செய்யப்படலாம்.

ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: 1 முதல் 120ஹெர்ட்ஸ் வரையிலான வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட், 6000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 2780 x 1264 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 100% டிசிஐ-பி3 கலர் கேமட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன் உடனான 6.78-இன்ச் 3டி கர்வ்டு 8டி எல்டிபிஓ அமோலெட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட் கொண்டு இயங்குகிறது. இது 16ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS 4.0 ஸ்டோரேஜை கொண்டுள்ளது, கேமராக்களை பொறுத்தவரை, டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் ஓஐஎஸ் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் மெயின் சென்சார் + 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்-ஐ கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர் உள்ளது. கடைசியாக இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5500mAh பேட்டரியுடன் வருகிறது.

Best Mobiles in India

English summary
Realme GT 7 Indian Variant Will Powered by MediaTek Dimensity 9300 Plus SoC Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X