இந்த Realme போனுக்கு இந்தியாவே வெயிட்டிங்! 7200mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் கடந்த வாரம் ரியல்மி ஜிடி 7 (Realme GT 7) ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்தது. இதே ரியல்மி விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. அமேசானில் தளத்தில் இந்த ஜிடி7 டீஸர் வெளியானது. எனவே வரும் வாரங்களில் இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ரியல்மி ஜிடி 7 போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
ரியல்மி ஜிடி 7 அம்சங்கள் (Realme GT 7 Specifications): 6.78 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இ டிஸ்பிளே (OLED display) கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,280x2,800 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 6500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 2600 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

அதேபோல் தரமான ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9400 பிளஸ் (octa-core MediaTek Dimensity 9400+) வசதி இந்த ரியல்மி போனில் உள்ளது. எனவே இந்த போனின் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
குறிப்பாக ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15)மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி உடன் இந்த ரியல்மி போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்896 (Sony IMX896) பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) கேமரா வசதியும் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
7,700mm square விசி கூலிங் சேம்பர் (7,700mm square VC cooling chamber) ஆதரவும் இந்த போனில் உள்ளது. எனவே நீண்ட நேரம் எந்தவித தடையுமின்றி இந்த போனில் கேம் விளையாடலாம். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது.
7200mAh பேட்டரியை கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐபி69 ரேட்டிங், யுஎஸ்பி டைப்-சி, வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுடன் இந்த ரியல்மி போன் இந்தியாவுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ரியல்மி ஜிடி 7 போன்.


Click it and Unblock the Notifications








