ப்பா என்ன ஒரு காம்பினேஷன்... 7000mAh பேட்டரி, 100W சார்ஜிங், Dimensity 9400+ சிப்செட்.. Realme புது போன்!
இந்த ஏப்ரல் மாதம் "புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தால்" நிரம்பி வழியும் என்பது போல் தெரிகிறது. ஏற்கனவே ஐக்யூ, போக்கோ, விவோ, சாம்சங், ஒன்பிளஸ் உள்ளிட்ட நிறுவனங்கள்ஏப்ரல் 2025 இல் தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த பட்டியலில் ரியல்மி நிறுவனத்தின் "இன்னொரு" புதிய ஸ்மார்ட்போனும் சேர்த்துள்ளது
"இன்னொரு" புதிய மாடல் என்று நாங்கள் குறிப்பிட்ட ஒரு காரணம் இருக்கிறது. ஏற்கனவே ரியல்மி நிறுவனம் அதன் நார்சோ 80 ப்ரோ (Realme Narzo 80 Pro) ஸ்மார்ட்போனை வருகிற ஏப்ரல் 9 ஆம் தேதியன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில், இந்த மாதமே சீன சந்தையில் இன்னொரு மாடலை அறிமுகம் செய்வதையும் உறுதிப்படுத்தியுள்ளது. அது ரியல்மி ஜிடி 7 (Realme GT 7) ஸ்மார்ட்போனாகும்.

ரியல்மி ஜிடி 7 என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இது என்ன மாதிரியான விலைக்கு அறிமுகம் செய்யப்படும்? இந்த ஸ்மார்ட்போன் எப்போது இந்திய சந்தையில் அறிமுகமாகும்? ரியல்மி நார்சோ 80 ப்ரோ ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இது என்ன விலைக்கு இந்தியாவில் அறிமுகமாகும்? இந்த ஏப்ரல் மாதம் வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன? இதோ விவரங்கள்:
ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை இடம்பெறலாம்? இது என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்?
- BOE-யால் உருவாக்கப்பட்ட 144Hz பிளாட் டிஸ்பிளேவை, அல்ட்ரா-நாரோ பெசல்களுடன் கொண்டிருக்கும்
- டைமன்சிட்டி 9400 சிப்செட்
- 8.3 மிமீ தடிமன் மற்றும் 205 கிராமுக்கும் குறைவான எடை கொண்ட லைட் அன்ட் ஸ்லிம் டிசைன்
- 7000 க்கும் அதிகமான எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி
- 100W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- ஐபி69 ரேட்டிங்
- விலையை பொறுத்தவரை இது ரூ.47,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம்; சீனாவை தொடர்ந்து நிச்சயம் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும். ஏனென்றால் ரியல்மி ஜிடி 7 ப்ரோ இந்தியாவில் அறிமுகமானது. ஆனால் எப்போது என்கிற வெளியீட்டு தேதி குறித்த விவரங்கள் இல்லை.
ரியல்மி நார்சோ 80 ப்ரோ (Realme Narzo 80 Pro) என்னென்ன அம்சங்களை பேக் செய்யலாம்? என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்?
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட்
-டூயல் ரியர் கேமரா செட்டப்
- 80W சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரி
- விலை நிர்ணயம் ரூ.20,000 க்குள் இருக்கலாம்.
ஏப்ரல் 2025 இல் வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன / செய்யப்படலாம்?
போக்கோ சி71 (POCO C71):
- இந்திய வெளியீட்டு தேதி: ஏப்ரல் 4
- 6.88-இன்ச் டிஸ்பிளே
- 12ஜிபி வரை ரேம் மற்றும் 2டிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ்
- 32எம்பி டூயல் கேமரா
- 8எம்பி செல்பீ கேமரா
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- 5,200mAh பேட்டரி
- 15W சார்ஜர்
- விலை ரூ.7,000 க்கும் குறைவாக இருக்கலாம்
ஐக்யூ இஸட்10 (iQOO Z10)
- இந்திய வெளியீட்டு தேதி: ஏப்ரல் 11
- 120Hz குவாட்-கர்வ்டு டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட்
- 50MP டூயல் ரியர் கேமரா செட்டப்
- 90W ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் 7,300mAh பேட்டரி
- விலை ரூ.21,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்
விவோ வி50இ (Vivo V50e)
- இந்திய வெளியீட்டு தேதி: ஏப்ரல் மாத நடுப்பகுதி
- 6.77-இன்ச் 1.5K டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- 50MP செல்பீ கேமரா
- 50எம்பி + 8எம்பி ரியர் கேமரா
- 90W சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி
- விலை ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை இருக்கலாம்


Click it and Unblock the Notifications








