Home
Mobile

இந்திய மார்கெட்ல ஃபர்ஸ்ட் டைம்.. டைமன்சிட்டி 9400இ சிப்செட்.. 7000mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்தியா மட்டுமல்லாமல், தெற்காசியா நாடுகள், ஐரோப்பா நாடுகள், தென்கிழக்கு ஆசியா நாடுகள் போன்ற பல்வேறு நாடுகளில் மார்கெட்களிலேயே முதல்முறையாக மீடியாடெக் டைமன்சிட்டி 9400இ (MediaTek Dimensity 9400e) சிப்செட்டுடன் வெளியாகும் மாடலாக ரியல்மி ஜிடி 7 (Realme GT 7) இருக்கப் போகிறது. ஏற்கனவே, 7000mAh பேட்டரி, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 120FPS கேமிங் போன்ற பீச்சர்களில் மிரளவிட்டுள்ளது. இந்த ரியல்மி ஜிடி 7 மற்றும் டைமன்சிட்டி 9400இ சிப்செட்டின் விவரங்களை பார்க்கலாம்.

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி ஜிடி 7டி மற்றும் ரியல்மி ஜிடி 7 மாடல்கள் மே 27ஆம் தேதி குளோபல் மார்கெட்டில் வெளியாக இருக்கின்றன. அதே தேதியில் இந்திய மார்கெட்டில் வெளியாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ரியல்மி ஜிடி 7 போனின் டிசைன், பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், டிஸ்பிளே பீச்சர்கள் அதிகார்பூர்வமாக உறுதி செய்யப்பட்டன.

இந்திய மார்கெட்ல ஃபர்ஸ்ட் டைம்.. டைமன்சிட்டி 9400இ சிப்செட்.. 7000mAh!

இப்போது, சிப்செட் விவரங்கள் உறுதியாகி மேலும் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. ஆகவே, இந்த ஜிடி 7 போனில் அல்ட்ரா பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் மீடியாடெக் டைமன்சிட்டி 9400இ சிப்செட் கிடைக்க இருக்கிறது. இந்த சிப்செட் ஒன்பிளஸ் ஏஸ்5 ரேசிங் எடிஷன் (OnePlus Ace5 Racing Edition) மாடலிலும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஆனால், வெளியீட்டு தேதி உறுதி செய்யப்படாததால், இப்போதைக்கு முதல் மாடலாக ரியல்மி ஜிடி 7 மட்டுமே இருக்கிறது. இந்த மீடியாடெக் டைமன்சிட்டி 9400இ சிப்செட்டில் இம்மார்டலிஸ் ஜி720 எம்சி12 ஜிபியு (Immortalis G720 MC12 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் 4என்எம் ப்ராஸசஸ் கிடைக்கிறது. 320 எம்பி கேமரா வரையில் அவுட்புட் கொடுக்கக் கூடியது.

டிஸ்பிளேவில் டபுள்யூகியூஎச்டி (WQHD) ரெசொலூஷன், 4K அவுட்புட் கிடைக்கிறது. வை-பை 7 (Wi-Fi 7) மற்றும் டூயல் ப்ளூடூத் என்ஜின் சப்போர்ட் கொண்ட ப்ளூடூத் 6.0 (Bluetooth 6.0) கனெக்டிவிட்டி கொடுக்கிறது. இந்த ப்ளூடூத் கனெக்டிவிட்டியானது 5 கி.மீ வரையில் ரேன்ஞ் கொடுக்கும். ஆகவே, இதுவரையில் கிடைத்ததைவிட அதிகமாக ரேஞ்ச் பெற்று கொள்ளலாம்.

ரியல்மி ஜிடி 7 அம்சங்கள் (Realme GT 7 Specifications): இந்த ரியல்மி போனில் 6,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட பிளாட் அமோலெட் (Flat AMOLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. 7,000mAh பேட்டரி மற்றும் அதற்கு 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. 7.5W ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது. மேலும், 120FPS கேமிங் அவுட்புட் கொடுக்கிறது.

முன்பே சொன்னதை போல மீடியாடெக் டைமன்சிட்டி 9400இ சிப்செட் கிடைக்கிறது. இந்த பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டவை. இப்போது, மார்கெட்டில் வெளியான பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். இந்த ரியல்மி ஜிடி 7 போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) கிடைக்க இருக்கிறது. 1.5K ரெசொலூஷன் வருகிறது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட ரெசிஸ்டன்ட் கிடைக்க இருக்கிறது. மேலும், சீன வேரியண்ட்டில் டூயல் ரியர் கேமரா வந்தது, ஆனால், இந்த குளோபல் வேரியண்ட்டின் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கிடைக்க இருக்கிறது. ஆகவே, 50 எம்பி மெயின் + 50 எம்பி டெலிபோட்டோ உள்ளது.

மேலும், 8 எம்பி அல்ட்ராவைடு கேமரா வருகிறது. மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்906 சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. டெலிபோட்டோவில் 2X ஆப்டிகல் ஜூமிங் கிடைக்க இருக்கிறது. இந்த ரியல்மி ஜிடி 7 போனில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் வர இருக்கிறது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வர இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT 7 Confirmed To Launch With MediaTek Dimensity 9400e SoC India and Globally on May 27
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X