மே.22 மிரளும்.. கேமிங் பில்ட்.. பட்ஜெட்ல 120W சார்ஜிங்.. 6000 நிட்ஸ் டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்தியாவின் முதல் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7 எஸ் ஜென் 3 சிப்செட் மட்டுமல்லாமல், உலகின் முதல் 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் டிஸ்பிளே கொண்ட மாடலாக ரியல்மி ஜிடி 6டி (Realme GT 6T) 5ஜி போன் வெளியாக இருக்கிறது.
இந்த ரியல்மி ஜிடி 6டி மாடலானது, வரும் மே 22ஆம் தேதி அறிமுகமாகிறது. ஆகவே, அந்த போனின் அம்சங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரியல்மி பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களையும் மிரளவிட்டுள்ளது. இப்போது, டிஸ்பிளே பீச்சர்கள் வெளியாகி கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கி இருக்கிறது.

பிரீமியம் நானோ மிரர் டிசைனில் (Premium Nano Mirror Design) மெட்டாலிக் கிரே கலரில் பட்டையை கிளப்புகிறது. இந்த போனின் எந்த அம்சங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. எந்த பட்ஜெட்டில் இந்த ரியல்மி ஜிடி 6டி மாடலை எதிர்பார்க்கலாம் உள்ளிட்ட விவரம் இதோ.
ரியல்மி ஜிடி 6டி அம்சங்கள் (Realme GT 6T Specifications): இந்த போனில் அல்ட்ரா பிரீமியம் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 (Octa Core Snapdragon 7+ Gen 3) சிப்செட் வருகிறது. 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5500mAh பேட்டரி வருகிறது. வெறும் 10 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம்.
கேமிங் பிரியர்களுக்காகவே இந்த அல்ட்ரா ஃபாஸ்ட் பேட்டரி சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் ஹீட் மற்றும் ஓவர் சார்ஜிங் கன்ட்ரோலுக்காக 7 லேயர் கூலிங் சிஸ்டம் கொண்டிருக்கிறது. அதேபோல அவுட்டோர் டிஸ்பிளே அனுபவத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் விதமாக 6000 நிட்ஸ் பீக் பிரைட்ஸ் கொண்டுள்ளது.

இவ்வளவு பிரைட்னஸ் கொண்ட உலகின் முதல் மாடலாக இந்த ரியல்மி ஜிடி 6டி போன் இருக்கிறது. அதோடு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கொண்டுள்ளது. மேற்கூறிய பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மற்ற அம்சங்களும், விலை விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், மார்கெட் வட்டாரங்களில் அவை கசிந்துள்ளன. ஏனென்றால், இந்த போனானது, சீனாவில் வெளியான ரியல்மி ஜிடி நியோ6 எஸ்இ போனின் ரீபிராண்ட் வெர்ஷனாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்போது, அந்த போனின் அம்சங்களை பார்ப்போம்.
இந்த போனிலும் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட், 5500mAh பேட்டரி மற்றும் 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. மற்ற அம்சங்களை பார்க்கையில், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மற்றும் ரியல்மி யுஐ 5 வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா, சோனி ஐஎம்எக்ஸ்883 சென்சாருடன் (Sony IMX882 sensor) வருகிறது.
8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா, சோனி ஐஎம்எக்ஸ்355 சென்சாருடன் (Sony IMX355 sensor) வருகிறது. அதேபோல 32 எம்பி செல்பீ ஷூட்டரானது, சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சாருடன் (Sony IMX615 sensor) வருகிறது. IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்டிருக்கிறது.
இந்த வேரியண்ட்டின் விலை சீனாவில் ரூ.23,730ஆக இருக்கிறது. ஆனால், இந்தியாவில் வெளியாகும் ரியல்மி ஜிடி 6டி போனில் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் மட்டும் 120Wஆக இருப்பதால், இங்கு விலை நிர்ணயமானது, ரூ.30,000 பட்ஜெட்டில் இருக்கும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








