ஆரம்பமே ரூ.4000 ஆஃபர்.. 120W சார்ஜிங்.. சோனி கேமரா.. புதிய ரியல்மி 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
இந்தியாவில் ரியல்மி ஜிடி 6டி (Realme GT 6T) ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5500எம்ஏஎச் பேட்டரி, ஸ்னாப்டிராகன் சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த போன். மேலும் ரியல்மி ஜிடி 6டி போனின் விலை மற்றும் அம்சங்கள் இங்கே பார்க்கலாம்.
ரியல்மி ஜிடி 6டி அம்சங்கள் (Realme GT 6T specifications): 6.78-இன்ச் எல்டிஒபி அமோலெட் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த போன். 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 6000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 100 % டிசிஐ-பி3 கலர் காமட் (DCI-P3 Color Gamut), 2160Hz அல்ட்ரா-ஹை ஃபிரிகொன்சி பிடபுள்யூஎம் டிம்மிங் (Ultra High Frequency PWM Dimming) மற்றும் கார்னிங் கொரில்லா விக்டஸ் 2 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 (Snapdragon 7+ Gen 3) சிப்செட் வசதியுடன் ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் அட்ரினோ 732 ஜபியு (Adreno 732 GPU) கிராபிக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என நான்கு வேரியண்ட்களில் ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் ரியல்மி யுஐ 5 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

OIS ஆதரவு கொண்ட் 50எம்பி சோனி எல்ஒய்டி-600 சென்சார் (Sony LYT-600 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். குறிப்பாக இந்த போனில் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சார் (Sony IMX615 sensor) இதில் உள்ளது.
அதேபோல் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் (In-display fingerprint sensor) மற்றும் IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுகளுடன் இந்த ரியல்மி போன் வெளிவந்துள்ளது. அதேபோல் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ போன்ற அம்சங்களும் இதில் உள்ளன.
5500எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த அசத்தலான ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (120W SuperVOOC fast charging) வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி (5G), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 5 802.11 ஏஎக்ஸ் (Wi-Fi 5 802.11 ax), புளூடூத் 5.4 (Bluetooth 5.4), ஜிபிஎஸ் (GPS), என்எப்சி (NFC), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் சில்வர் மற்றும் ரேஸர் கிரீன் நிறங்களில் இந்த புதிய போனை வாங்க முடியும். வரும் மே 29-ம் தேதி அமேசான் மற்றும் ரியல்மி.காம் தளங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி 6டி போனின் விலை ரூ.30,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.32,999 விலையிலும், 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.35,999 விலையிலும், 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.39,999 விலையிலும் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.4000 தள்ளுபடியும் உள்ளது.


Click it and Unblock the Notifications








