Home
Mobile

போட்டு தாக்கு.. ரூ.10,000 டிஸ்கவுண்ட்டில் முரட்டு Realme போன்.. 12GB ரேம், 5500mAh பேட்டரி, 120W சார்ஜிங்!

ரூ.10000 தள்ளுபடி விலையில் விற்கப்படும் இந்த ரியல்மி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்: 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான டிஸ்பிளே, சக்திவாய்ந்த குவால்காம் சிப்செட், 12ஜிபி வரை ரேம், ஓஐஎஸ் ஆதரவு கொண்ட கேமரா செட்டப், 5500mAh பேட்டரி மற்றும் 120W பாஸ்ட் சார்ஜிங்!

எந்த மாடல்? நாம் இங்கே பேசுவது ரியல்மி ஜிடி 6டி (Realme GT 6T) ஸ்மார்ட்போனை பற்றித்தான். கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் (Amazon India Website) ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

ரூ.10,000 டிஸ்கவுண்ட்டில் முரட்டு Realme போன்.. எந்த மாடல்?

தற்போது அமேசான் இந்தியா வலைதளத்தில், ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது அதன் அசல் எம்ஆர்பி விலையான (MRP Price) ரூ.35,999 க்கு பதிலாக 19% நேரடி தள்ளுபடியை (Direct Discount) பெற்று ரூ.28,998 க்கு வாங்க கிடைக்கிறது. கூடவே ரூ.3000 கூப்பன் ஆபரும் (Coupon Offer) கிடைக்கிறது.

ரூ.3000 கூப்பன் ஆபரை கிளிக் செய்து பயன்படுத்தும் பட்சத்தில் ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை (Final Offer Price) ரூ.25,998 க்கு கொண்டுவர முடியும். அதாவது அசல் எம்ஆர்பி விலையில் இருந்து ரூ.10,000 விலை குறைக்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் க்ரீன் (Green), சில்வர் (Silver) மற்றும் பர்பிள் (Purple) ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது.

ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்களை பொறுத்தவரை, இது கிளாஸ் போன்ற பினிஷ் கொண்ட டூயல் டோன் ரியர் பேனலை (Dual-tone rear Panel with a mirror-like finish) கொண்டுள்ளது. அதில் 2 கேமரா மாட்யூல்கள் (2 camera modules) மற்றும் டூயல் எல்இடி ஃபிளாஷ் (Dual-LED flash) உள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 1 முதல் 120ஹெர்ட்ஸ் வரையிலான வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Variable Refresh Rate), 6,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 2780 x 1264 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 100% டிசிஐ-பி3 கலர் கேமட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன் (Corning Gorilla Glass Victus 2 Protection) உடனான 6.78-இன்ச் 3டி கர்வ்டு 8டி எல்டிபிஓ அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ப்ராசஸரை பொறுத்தவரை, இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 (Qualcomm Snapdragon 7+ Gen 3) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த புதிய சிப்செட்டை கொண்டு இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போனும் கூட இதுவாகும். மேலும் இது 12ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS 4.0 ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ஐ (Android 14 OS) அடிப்படையாக கொண்ட ரியல்மி யுஐ 5 (Realme UI 5) கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் அதன் பேக் பேனலில் டூயல் ரியர் கேமரா செட்டப்பை (Dual Rear Camera Setup) கொண்டுள்ளது. அதில் ஓஐஎஸ் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் மெயின் சென்சார் + 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் உள்ளது. முன்பக்கத்தில் 32மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர் உள்ளது.

கடைசியாக ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போன் ஆனது 5500mAh பேட்டரியுடன் வருகிறது. இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ( 120W fast charging) ஆதரிக்கிறது. ரியல்மி நிறுவனத்தின் கூற்றுப்படி இது வெறும் 10 நிமிடங்களில் ஸ்மார்ட்போனில் உள்ள பேட்டரியை 50 சதவிகிதம் சார்ஜ் செய்யும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT 6T Selling At Cheapest Ever Discount Price in Amazon Valentines Day Sale Until Feb 14
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X