வெளுக்குது விற்பனை.. ரூ,24,999 போதும்.. SONY கேமரா.. 120W சார்ஜிங்.. 5500mAh பேட்டரி.. 16GB ரேம்.. எந்த மாடல்?
டால்பி விஷன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, 120W சூப்பர்வூக் சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி, சோனி எல்ஒய்டி சென்சார் கொண்ட 50 எம்பி கேமரா, 16 ஜிபி ரேம் போன்ற பிரீமியம் பீச்சர்கள் மட்டுமல்லாமல், டூயல் கலர் மெட்டாலிக் லுக்கில் மிட்-ரேஞ்ச் செக்மெண்ட்டில் வெளியாகிய ரியல்மி ஜிடி 6டி (Realme GT 6T) போனுக்கு பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இதுவொரு லிமிடெட் பிரீயட் சலுகையாகும். ஆகவே, இந்த போனின் விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை பார்ப்போம்.
ரியல்மி ஜிடி 6டி விலை (Realme GT 6T Price): இந்த ரியல்மியின் 8 ஜிபி ரேம் +128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.30,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.32,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.35,999ஆகவும் இருக்கிறது.

மேலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.39,999ஆகவும் இருக்கிறது. இப்போது, ஜூன் 17ஆம் தேதி முதல் ஜூன் 23ஆம் தேதி வரையில் ஆர்டர் செய்வோருக்கு ரூ.4000 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.2000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஆகவே, ரூ.6000 குறைவாக இந்த ரியல்மி போனை வாங்கி கொள்ளலாம்.
அமேசான் (Amazon) மற்றும் ரியல்மி.காம் (Realme.com) தளங்களில் ரியல்மி ஜிடி6டி செலிபிரேஷன் விற்பனையின் (Realme GT 6T Celebration Sale) கீழ் இந்த டிஸ்கவுண்ட்டை பெற்று கொள்ளலாம். ப்ளூயிட் சில்வர் (Fluid Silver), ரேஷர் கிரீன் (Razor Green) ஆகிய 2 கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இப்போது, பீச்சர்களை பார்ப்போம்.
ரியல்மி ஜிடி 6டி அம்சங்கள் (Realme GT 6T Specifications): இந்த போனில் 6.78 இன்ச் எல்டிபிஓ அமோலெட் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டால்பி விஷன் (Dolby Vision), பி3 கலர் காமட், டிசி டிம்மிங் (DC Dimming) மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) டிஸ்பிளே புரொடெக்சன் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் பேஸ்டு ரியல்மி யுஐ 5 கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 7+ Gen 3 4nm) சிப்செட் வருகிறது. மேலும், அட்ரினோ 732 ஜிபியு (Adreno 732 GPU) கிராபிக்ஸ் வருகிறது.
இந்த ரியல்மி ஜிடி 6டி போனில் 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் வருகிறது. சோனி எல்ஒய்டி 600 சென்சார் மற்றும் 4K வீடியோ ஷூட் சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சார் கொண்ட 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. மேலும், 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.
இந்த ஷூட்டரில் சோனி ஐஎம்எக்ஸ்615 (Sony IMX615) சென்சார் மற்றும் 4K ரெக்கார்டிங் வருகிறது. 5500mAh பேட்டரி மற்றும் 120W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) வருகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ மற்றும் டைப்-சி ஆடியோ ஜாக் வருகிறது. IP65 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது.


Click it and Unblock the Notifications