அதிரவிடும் விலை.. 100W சார்ஜிங்.. சோனி கேமரா.. 256GB மெமரி.. புதிய ரியல்மி 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் அமேசான் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே வரும் வாரங்களில் இந்த ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் மற்றும் விலைக் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரியல்மி ஜிடி 6டி அம்சங்கள் (Realme GT 6T specifications): 6.78-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே (OLED display) வசதியைக் கொண்டு இந்த ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 6000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளெ. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 (Snapdragon 7+ Gen 3) சிப்செட் வசதியுடன் ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட்போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். இந்த ரியல்மி போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும் இந்த ரியல்மி ஜிடி 6டி போன். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி சோனி ஐஎம்எக்ஸ்615 (Sony IMX615) கேமராவும் இதில் உள்ளது.
எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் ரியல்மி ஜிடி 6டி போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. அதேபோல் கேமிங் வசதிக்கு தகுந்தபடி அனைத்து சிறப்பு அம்சங்களும் இந்த போனில் உள்ளது.

5500எம்ஏஎச் பேட்டரி (5500mAh battery) வசதியுடன் ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (100W fast charging) வசதியும் உள்ளது. எனவே விரைவாக இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும். இதுதவிர இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு இதில் உள்ளது.
5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரியல்மி போனில் உள்ளது. மேலும் சமீபத்தில் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.31,999 விலையில் ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications








