Home
Mobile

அட்ரா சக்க.. மே 22-ல் வருது Realme 5ஜி போன்.. 100W சார்ஜிங்.. சோனி கேமரா.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் 100W ஃபாஸ்ட் சார்ஜிங், சோனி கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ரியல்மி ஜிடி 6டி அம்சங்கள் (Realme GT 6T specifications): தனித்துவமான ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 (Snapdragon 7+ Gen 3) சிப்செட் வசதியுடன் ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதாவது இந்த போன் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும்.

அட்ரா சக்க.. மே 22-ல் வருது Realme 5ஜி போன்.. சோனி கேமரா.. எந்த மாடல்?

விசி கூலிங் (VC cooling) ஆதரவையும் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போன். ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் ரியல்மி ஸ்மார்ட்போன. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.

குறிப்பாக OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும் இந்த ரியல்மி ஜிடி 6டி போன். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி சோனி ஐஎம்எக்ஸ்615(Sony IMX615) கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர டூயல் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

6.78-இன்ச் எல்டிஒபி 1.5கே (6.78″ 1.5K 120Hz LTPO) டிஸ்பிளே வசதியைக் கொண்டு இந்த ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 6000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு வெளிவரும் இந்த ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு இதில் உள்ளது.

ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போனில் 5500எம்ஏஎச் பேட்டரி (5500mAh battery) வசதி உள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (100W fast charging) வசதியும் உள்ளது. எனவே விரைவாக இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்ரா சக்க.. மே 22-ல் வருது Realme 5ஜி போன்.. சோனி கேமரா.. எந்த மாடல்?

ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போனில 5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளது. மேலும் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

எப்போது அறிமுகம்: இந்தியாவில் வரும் மே 22-ம் தேதி ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போன் அமேசான் ( Amazon) தளத்தில் விற்பனைக்கு வரும். அதேபோல் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.31,999 விலையில் ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT 6T India Launch Date Revealed: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X