Home
Mobile

டாப் Rating பெற்ற Realme 5G போன் மீது ரூ.3,000 டிஸ்கவுண்ட்.. அடிச்சு நொறுக்கும் ஆர்டர்.. எந்த மாடல்?

அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் மூலம் டாப் ரேட்டட் (Top Rated) என்று முத்திரை குத்தப்பட்ட ஒரு ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன், தற்போது ரூ.3000 டிஸ்கவுண்ட் விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. இது எந்த வங்கி சலுகையும், எக்ஸ்சேன்ஜ் சலுகையும் இல்லாத நேரடி விலை குறைப்பாகும்.

அதென்ன எந்த மாடல்? இதன் அசல் விலை என்ன? ரூ.3000 டிஸ்கவுண்ட்டிற்கு பிறகான ஆபர் விலை என்ன? இது என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? அமேசான் இந்தியா வலைத்தளத்தில் வேறு என்னென்ன ரியல்மி ஸ்மார்ட்போன்கள் மீது இதுபோன்ற டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டு உள்ளது? இதோ விவரங்கள்:

டாப் Rating பெற்ற Realme 5G போன் மீது ரூ.3,000 டிஸ்கவுண்ட்!

ரூ.3,000 நேரடி தள்ளுபடியை பெற்றுள்ளது ரியல்மி ஜிடி 6டி 5ஜி ஸ்மார்ட்போனாகும். தற்போது இது அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக ரூ.33,999 க்கு பதிலாக ரூ.30,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் ஆபர் விலையாகும்.

இதே போல ரியல்மி ஜிடி 6டி 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆனது, அதன் அசல் விலையான ரூ.35,999 க்கு பதிலாக ரூ.3000 நேரடி தள்ளுபடியை பெற்று, அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக ரூ.32,999 க்கு வாங்க கிடைக்கிறது.

மேலும் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆனது, அசல் விலையான ரூ.37,999 க்கு பதிலாக ரூ.2000 தள்ளுபடிக்கு பிறகு ரூ.35,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆனது, அசல் விலையான ரூ.41,999 க்கு பதிலாக ரூ.3000 தள்ளுபடிக்கு பிறகு ரூ.38,999 க்கும் வாங்க கிடைக்கிறது .

ரியல்மி ஜிடி 6டி 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 1 முதல் 120ஹெர்ட்ஸ் வரையிலான வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட், 6,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 2780 x 1264 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 100% டிசிஐ-பி3 கலர் கேமட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன் உடனான 6.78-இன்ச் 3டி கர்வ்டு 8டி எல்டிபிஓ அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ப்ராசஸரை பொறுத்தவரை, இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 (Qualcomm Snapdragon 7+ Gen 3) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த புதிய சிப்செட்டை கொண்டு இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போனும் கூட இதுவாகும். மேலும் இது 16ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS 4.0 ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ரியல்மி யுஐ 5 கொண்டு இயங்குகிறது. இதன் பேக் பேனல் ஆனது மிரர் போன்ற பினிஷ் (Mirror-like finish) கொண்ட டூயல் டோன் ரியர் பேனலை (Dual-tone rear panel) கொண்டுள்ளது. அதில் 2 கேமரா மாட்யூல்கள் (2 camera modules) மற்றும் டூயல் எல்இடி ஃபிளாஷ் (Dual-LED flash) உள்ளன.

கேமராக்களை பொறுத்தவரை, இதன் டூயல் ரியர் கேமரா செட்டப்பில் ஓஐஎஸ் ஆதரவு (OIS Support) உடனான 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் உள்ளது. முன்பக்கத்தில் , செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய 32 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர் உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போன் ஆனது 5500mAh பேட்டரியுடன் வருகிறது. இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கை (120W fast charging) ஆதரிக்கிறது. ரியல்மி நிறுவனத்தின் கூற்றுப்படி இது வெறும் 10 நிமிடங்களில் ஸ்மார்ட்போனில் உள்ள பேட்டரியை 50 சதவிகிதம் சார்ஜ் செய்யும் திறன் கொண்டது.

அமேசான் வலைத்தளத்தில் வேறு என்னென்ன ரியல்மி ஸ்மார்ட்போன்கள் மீது நல்ல டிஸ்கவுண்ட் கிடைக்கிறது? ரியல்மி 70 டர்போ (Realme 70 Turbo) மாடல் ரூ.2000 தள்ளுபடிக்கு பின்னர் ரூ.14,999 முதல் வாங்க கிடைக்கிறது. ரியல்மி 70எக்ஸ் 5ஜி (Realme 70x 5G) மாடல் ரூ.1500 தள்ளுபடிக்கு பின்னர் ரூ.11,499 க்கு வாங்க கிடைக்கிறது; ரியல்மி நார்சோ என்65 (Realme Narzo N65) மாடல் ரூ.1000 தள்ளுபடிக்கு பின்னர் ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT 6T 5G At Unbelievable Discount Price Rs 30999 in Amazon Top Brand Sale Ends December 5
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X