இப்படி இருக்கனும் ஆஃபர்.. ரூ.10,000 ரேட் கட்ல 5500mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் ரியல்மி ஜிடி 7 மற்றும் ரியல்மி ஜிடி 7டி மாடல்கள் வெளியாகியதை தொடர்ந்து அதற்கு முன்பு வெளியான ரியல்மி ஜிடி 6 (Realme GT 6) போனுக்கு நேரடியாக ரூ.10,000 விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த விலைக்கு வாங்க எந்த பேங்க் கார்டுகளும் வேண்டியது கிடையாது. 5500mAh பேட்டரி, 100W சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா போன்ற பிரீமியம் பீச்சர்களை கொடுக்கும் இந்த ரியல்மி ஜிடி 6 போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ரியல்மி ஜிடி 6 பிளிப்கார்ட் விலை (Realme GT 6 Flipkart Price): இந்த ரியல்மி போனின் மார்கெட் விலையை பார்க்கையில், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலானது ரூ.40,999 பட்ஜெட் கொண்டுள்ளது. அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலானது ரூ.42,999 பட்ஜெட்டிலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலானது ரூ.44,999 பட்ஜெட்டிலும் வெளியானது.

ஆனால், இப்போது பிளிப்கார்ட் விற்பனையில் 8 ஜிபி ரேம் மாடலானது வெறும் ரூ.30,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஆகவே, நேரடியாக ரூ.10,000 விலை குறைப்பில் கிடைக்கிறது. அதேபோல 12 ஜிபி ரேம் மாடலானது ரூ.32,999 பட்ஜெட்டிலும், 16 ஜிபி ரேம் மாடலானது ரூ.36,999 பட்ஜெட்டிலும் கிடைக்கிறது. இப்போது, ஆர்டர் செய்தால் எந்த கார்டுகளும் இல்லாமல் இந்த விலைக்கு வாங்கலாம்.
ரியல்மி ஜிடி 6 அம்சங்கள் (Realme GT 6 specifications): கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் மற்றும் 6000 நிட்ஸ் பீக் பிரைட்ன்ஸ் கொண்ட 6.78 இன்ச் (2780 x 1264 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 2500Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
இது ஒரு வருடம் பழைய மாடலாக இருப்பதால், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 5 (Realme UI 5) கிடைக்கிறது. இருப்பினும், 3 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்களை கொடுக்கிறது. அட்ரினோ 735 ஜிபியு (Adreno 735 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 8எஸ் 3 (Octa Core 4nm Snapdragon 8s Gen 3) சிப்செட் கிடைக்கிறது.
இந்த ரியல்மி ஜிடி 6 போனின் ஒட்டுமொத்த கேமராக்களிலும் பிரீமியம் சென்சார்கள் வருகின்றன. ஆகவே, 50 எம்பி மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி 808 சென்சாரும், 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்355 சென்சாரும், 50 எம்பி டெலிபோட்டோவில் சாம்சங் ஜேஎன்5 சென்சாரும் கிடைக்கிறது. அதேபோல 32 எம்பி செல்பீயில் சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சார் வருகிறது.
ஆட்டோ நைட் விஷன், நெக்ஸ்ட் ஏஐ போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. கேமிங் பிரியர்கள் மூக்கில் விரல்வைக்கும்படியான பேக்கப் கொடுக்க 5500mAh பேட்டரி மற்றும் 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த ரியல்மி ஜிடி 5 போனில் ப்ளூயிட் சில்வர் (Fluid Silver) மற்றும் ரேசர் கிரீன் (Razor Green) ஆகிய கலர்கள் கிடைக்கின்றன. பட்ஜெட்டுக்கு ஏற்ற மாடலாகும்.
அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!


Click it and Unblock the Notifications








