விட்ராதீங்க சார்.. ரூ.6000 விலை குறைப்பு.. டிசம்பர் 6 கடைசி.. Realme மாடல்களுக்கு கிளப்புது டிஸ்கவுண்ட்!
பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரியல்மி டேஸ் விற்பனை 2024 (Realme Days Sale 2024) தொடங்கி இருக்கிறது. இந்த விற்பனையில் ரியல்மி ஜிடி 6 (Realme GT 6), ரியல்மி 13 ப்ரோ பிளஸ் (Realme 13 Pro Plus) மற்றும் ரியல்மி 12எக்ஸ் (Realme 12X) மாடல்களுக்கு இதுவரையில் கிடைக்காத டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இந்த டிஸ்கவுண்ட் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? மேற்கண்ட மாடல்களின் விலை மற்றும் பீச்சர்கள் எப்படி? உள்ளிட்ட விவரங்களை இப்போது பார்க்கலாம்.
இந்த ரியல்மி டேஸ் விற்பனை டிசம்பர் 3ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரையில் மட்டுமே நடக்கிறது. இந்த நாட்களில் பிளிப்கார்ட் தளத்தில் மூன்று மாடல்களை ஆர்டர் செய்தால், அதிகபட்சமாக ரூ.6000 டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். அதேபோல நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகைகளும் கிடைக்கிறது. ரேம் மற்றும் மெமரி வேரியண்ட்களில் டிஸ்கவுண்ட் இருக்கிறது.

ரியல்மி ஜிடி 6 விற்பனை (Realme GT 6 Sale): இந்த ஜிடி மாடலின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடலின் விலை ரூ.40,999ஆக இருக்கிறது. இப்போது ரியல்மி டேஸ் விற்பனையில் ஆர்டர் செய்தால், ரூ.6000 பேங்க் டிஸ்கவுண்ட் அல்லது ரூ.5000 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் பெற்று கொள்ளலாம். மேலும், 9 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கிடைக்கிறது. ஆகவே, ரூ.34,999 வாங்கி கொள்ளலாம்.
இதேபோல 12 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ரேம் மாடல்களுக்கும் ரூ.6000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த ரியல்மி ஜிடி 6 போனில் 6.78 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 4என்எம் சிப்செட் வருகிறது. 50 எம்பி சோனி கேமரா மற்றும் 32 எம்பி சோனி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 100W சூப்பர்வூக் சார்ஜிங் மற்றும் 5500mAh பேட்டரி இருக்கிறது.
ரியல்மி 13 ப்ரோ பிளஸ் விற்பனை (Realme 13 Pro Plus Sale): இந்த ரியல்மியின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.32,999ஆக இருக்கிறது. இப்போது ரியல்மி டேஸ் விற்பனையில் ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட் அல்லது ரூ.4000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த போனுக்கும் 9 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை இருக்கிறது.
ஆகவே, ரூ.25,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த ரியல்மி 13 ப்ரோ பிளஸ் போனில் 6.7 இன்ச் கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் சிப்செட் வருகிறது. 32 எம்பி சோனி சென்சார் செல்பீ கேமரா மற்றும் 50 எம்பி சோனி சென்சார் மெயின் கேமரா வருகிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5200mAh பேட்டரி வருகிறது.

ரியல்மி 12எக்ஸ் விற்பனை (Realme 12X Sale): இந்த ரியல்மி போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,499ஆக இருக்கிறது. ரியல்மி டேஸ் விற்பனையில் ரூ.1,250 டிஸ்கவுண்ட் போக ரூ.11,249 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அதேபோல 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு ரூ.1,900 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
இந்த 8 ஜிபி மாடலின் விலை ரூ.13,499ஆக இருக்கிறது. இந்த மாடலுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ கிடையாது. 6.72 இன்ச் எல்சிடி டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 6100பிளஸ் சிப்செட் மற்றும் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா மற்றும் 5000mAh பேட்டரி வருகிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது. டிசம்பர் 6ஆம் தேதிக்குள் ஆர்டர் செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








