Home
Mobile

SALE OFFER-னா இப்படி இருக்கணும்.. முழுசா ரூ.5000.. இந்த புது Realme போன் மேல ஆர்டர் விழுந்துகிட்டே இருக்கு!

அப்பர் மிட்-ரேன்ஜ் பிரிவில்.. "இப்படி ஒரு ஸ்மார்ட்போனா!" என்று ஆச்சாரியப்படுத்தும் அளவிலான முக்கிய அம்சங்களுடன் அறிமுகமான ஒரு ரியல்மி ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை இன்று (ஜூன் 26) முதல் தொங்கியது. நாம் இங்கே பேசுவது - சில நாட்களுக்கு முன்பு இந்திய சந்தையில் அறிமுகமான ரியல்ம் ஜிடி 6 (Realme GT 6) ஸ்மார்ட்போனை பற்றித்தான். பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் மீது ஜூன் 28 ஆம் தேதி வரையிலாக நம்ப முடியாத சேல் ஆபர்கள் (Sale Offers) அறிவிக்கப்பட்டுள்ளன.

ரியல்மி ஜிடி 6-ல் என்ன ஸ்பெஷல்? இது பவர்ஃபுல் ஆன அம்சங்களுடன் வருகிறது. இதில் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட்டும் (Snapdragon 8s Gen 3 Chipset) அடங்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6000 நிட்ஸ் சூப்பர் ப்ரைட்னஸ் டிஸ்பிளேவையும் (6000 nits Super Brightness Display) கொண்டுள்ளது.

இந்த புத்தம் புது Realme போன் மேல ஆர்டர் விழுந்துகிட்டே இருக்கு!

இதுதவிர்த்து நைட் வீடியோ ஷூட்டிங் (Night Video Shooting) மற்றும் லோ-லைட் போட்டோகிராஃபியை (Low-light Photography) மேம்படுத்தும் ஒரு மெயின் சோனி லைட் -808 ஓஐஎஸ் கேமராவையும் (Primary Sony LYT-808 OIS camera) கொண்டுள்ளது, மேலும் இது 120W சூப்பர்வூக் சார்ஜிங்கை (120W SUPERVOOC charging) ஆதரிக்கிறது மற்றும் 5500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது வெறும் 10 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்யும்.

ரியல்ம் ஜிடி 6 ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன? சேல் ஆபர் விலை என்ன? ரியல்ம் ஜிடி 6 ஸ்மார்ட்போன் மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனின் அசல் விலை ரூ.40,999 ஆகும். இருப்பினும் ரூ.4,000 வங்கி சலுகை மற்றும் ரூ.1,000 எக்ஸ்சேன்ஜ் ஆபரை பெற்ற பின்னர் இதை ரூ.35,999 க்கு வாங்கலாம்.

இந்த புத்தம் புது Realme போன் மேல ஆர்டர் விழுந்துகிட்டே இருக்கு!

இதேபோல 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் விலை ரூ.42,999 ஆகும். இருப்பினும் ரூ.3,000 வங்கி சலுகை மற்றும் ரூ.1,000 எக்ஸ்சேன்ஜ் ஆபரை பெற்ற பின்னர் இதை ரூ.38,999-க்கு வாங்கலாம். கடைசியாக உள்ள 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் விலை ரூ.44,999 ஆகும். இருப்பினும் ரூ.4,000 வங்கி சலுகை மற்றும் ரூ.1,000 எக்ஸ்சேன்ஜ் ஆபரை பெற்ற பின்னர் இதை ரூ.39,999 க்கு வாங்கலாம்.

ஆஃப்லைன் வழியாக வாங்கும் போது கிடைக்கும் சலுகைகளை பொறுத்தவரை, 12 மாதங்கள் வரையிலான ஸீரோ டவுன் பேமண்ட் மற்றும் 24 மாதங்கள் வரை ஈஸி இஎம்ஐ விருப்பங்ககள் கிடைக்கும். ரியல்மி ஜிடி 6 ஸ்மார்ட்போனின் இந்த விற்பனை ஜூன் 28 வரை தொடரும். இந்த ஸ்மார்ட்போனை ஆன்லைன் வழியாக வாங்க விரும்புபவர்கள் ரியல்மின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட்டை அணுகலாம்.

இந்த புத்தம் புது Realme போன் மேல ஆர்டர் விழுந்துகிட்டே இருக்கு!

ரியல்மி ஜிடி 6 ஸ்மார்ட்போனின் மற்ற முக்கிய அம்சங்கள்: மேற்கண்ட ஸ்பெஷல் ஆன அம்சங்களை தவிர்த்து இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், ஹீட் மேனேஜ்மென்ட்டிற்கான 3டி டெம்பர்டு டூயல் விசி கூலிங் சிஸ்டம், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் LTPO AMOLED டிஸ்பிளே போன்றவைகளையும் கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, இதில் ஓஐஎஸ் உடனான 50எம்பி சோனி சென்சார் + 50எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா உல்ளன. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப் ஆனது 4கே ரெகார்ட் ஆதரிக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. டால்பி விஷன் ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் 120W அல்ட்ராடார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,500mAh பேட்டரியை கொண்டுள்ளது. கடைசியாக இது ஹை-ரெஸ் ஆடியோ சான்றளிக்கப்பட்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Realme GT 6 Now Available to Buy in India Check Price Specs Offers Sale Will Continue Until June 28
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X