Home
Mobile

மாஸ் காட்டிய Realme.. செதுக்கி செஞ்ச பட்ஜெட் பிளாக்ஷிப் போன்.. 120W பாஸ்ட் சார்ஜிங்.. 1TB ஸ்டோரேஜ்.. விலை என்ன

ரியல்மி (Realme) நிறுவனம் இன்று அதன் சொந்த சந்தையான சீன சந்தையில் அதன் புதிய ரியல்மி ஜிடி 6 (Realme GT 6) என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனை நிறுவனம் இதற்கு முன்பு இந்திய சந்தை மற்றும் உலக சந்தைகளில் அறிமுகம் செய்திருந்தது. இப்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ரியல்மி ஜிடி 6 ஸ்மார்ட்போனில் நிறுவனம் சிறிய மாற்றங்களை செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்ச தகவலை பற்றி இப்போது பார்க்கலாம்.

ரியல்மி ஜிடி 6 (Realme GT 6) ஸ்மார்ட்போன் சாதனம் 6.78" இன்ச் கொண்ட 1.5K 8T LTPO AMOLED டிஸ்பிளேவை (Display) கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 120Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh rate) உடன் 6000 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. இந்த ரியல்மி ஜிடி 6 (Realme GT 6) ஸ்மார்ட்போன் சாதனம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் உடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ் காட்டிய Realme.. செதுக்கி செஞ்ச பட்ஜெட் பிளாக்ஷிப் போன்..

ரியல்மி ஜிடி 6 (Realme GT 6):

இந்த புதிய ரியல்மி ஜிடி 6 (Realme GT 6) ஸ்மார்ட்போன் டிவைஸ் 16GB LPDDR5X ரேம் (RAM) அம்சத்துடன் 1TB வரையிலான UFS 4.0 ஸ்டோரேஜ் (storage) உடன் வருகிறது. இது 5800mAh பேட்டரி உடன் 120W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரியல்மி ஜிடி 6 (Realme GT 6) கேமரா அம்சத்திலும் குறைபாடு வைக்கவில்லை.

புதிய ரியல்மி ஜிடி 6 (Realme GT 6) ஸ்மார்ட்போன் சாதகமானது OIS ஆதரவு உடன் 50MP Sony IMX890 பிரைமரி கேமரா மற்றும் 8MP அல்ட்ரா-வைட் கேமராவைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், செல்ஃபிக்களுக்கு நீங்கள் Realme GT 6 இல் 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 14 (Android 14) அடிப்படையாகக் கொண்ட realme UI 5.0 ஐ ஸ்மார்ட்போன் இயக்குகிறது.

இந்த புத்தம் புதிய ரியல்மி ஜிடி 6 (Realme GT 6) போனில் நிறுவனம் சக்தி வாய்ந்த வைஃபை 7 (Wi-Fi 7) அம்சத்தை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது NFC, டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் IP65 மதிப்பீட்டுடன் வருகிறது. இது டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் போன்ற அம்சங்களை அடக்கியுள்ளது.

சீனாவில் ரியல்மி ஜிடி 6 விலை என்ன? (Realme GT 6 Price In China):

இதன் விலை பற்றி பேசுகையில், ரியல்மி ஜிடி 6 (Realme GT 6) பட்ஜெட் பிளாக்ஷிப் சாதனமாக வெளிவந்துள்ளது.
1. Realme GT 6 போனின் 12GB + 256GB ஸ்டோரேஜ் மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 32,138 மட்டுமே.
2. Realme GT 6 போனின் 16GB + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை இந்திய மதிப்பில் ரூ. 35,583 ஆகும்.
3. Realme GT 6 போனின் 16GB + 512GB ஸ்டோரேஜ் மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 39,028 மட்டுமே.
4. Realme GT 6 போனின் 16GB + 1TB விலை வேரியண்ட் மாடல் இந்திய மதிப்பில் ரூ. 44,769 ஆகும்.
நிறங்கள்: பர்பிள் (Purple), வெள்ளை (White) மற்றும் பிளாக் (Black)

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT 6 Launched 16GB RAM 1TB Storage In China Snapdragon 8 Gen 3 SoC 120W Fast Charging Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X