ஆகஸ்ட் 18: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் களமிறங்கும் ரியல்மி ஜிடி 5ஜி.!
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனை வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக அசத்தலான அம்சங்களுடன் இந்த சாதனம் பட்ஜெட் விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் உடன் ரியல்மி ஜிடி 5ஜி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனம் 5ஜி ஆதரவுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் இந்தியாவில்
சியோமி, ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஆன்லைனில் வெளிவந்த ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.
ரியல்மி ஜிடி 5ஜி ஸமார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த அசத்தலான சாதனம்.

ரியல்மி ஜிடி 5ஜி ஸமார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராஸசர் வசதி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த சாதனத்தை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு
இந்த அசத்தலான சாதனம் வெளிவரும்.
ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த சாதனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications