கீக்பெஞ்ச் உறுதிப்படுத்திய அம்சம்: ரியல்மி ஜிடி 5ஜி இப்படிதான் இருக்கும்!

|

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் மார்ச் 4 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சந்தைக்கு வருவதற்கு முன்பாக இதன் சிறப்பம்சங்கள் பெஞ்ச்மமார்க் தளமான கீக்பெஞ்ச்சில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாதிரி எண் RMX2202 உடன் வருகிறது. இது 372 மல்டிகோர் மதிப்பெண்களை கொண்டுள்ளது.

கீக்பெஞ்ச் வெளியிட்ட அம்சம்: ரியல்மி ஜிடி 5ஜி இப்படிதான் இருக்கும்!

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி செயலி மூலம் இயங்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் எல்பிடிடிஆர் 5 ரேம் உடன் வருகிறது. முன்னதாக வெளியான தகவலின்படி ரியல்மி ஜிடி 5ஜி டால்பி அட்மோஸ் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் ரியல்மி எக்ஸ் 7 போன்ற ஒத்த கோல்ட் பூச்சுடனான கருப்பு பெட்டியுடன் வரும் என கூறப்படுகிறது. 5ஜி ஆதரவோடு 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதத்தை கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் மேல் இடது மூலையில் ஒரு பஞ்ச் ஹோல் வடிவமைப்பை கொண்டுள்ளது. இது 64 மெகாபிக்சல் உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

12 ஜிபி ரேம் 256 ஜிபி உள்சேமிப்போடு வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு இயக்கப்படுகிறது. ரியல்மி ஜிடி 5ஜி இந்திய விலை மதிப்புப்படி தோராயமாக ரூ.33,800 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதம் அல்லது ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme GT 5G Specifications Leaked on Geekbench

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X