ஆகஸ்ட் 25: இந்தியாவில் விற்பனைக்கு வரும் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்.!
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனை வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி விற்பனைக்கு கொண்டுவர உள்ளது. குறிப்பாக இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் சிப்செட், 66 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆகஸ்ட் 25-ம் தேதி மதியம் 12 மணி அளவில் ரியல்மி.காம், பிளிப்கார்ட் வலைத்தளங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனின்விலை ரூ.37,999-ஆக உள்ளது. பின்பு 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி 5ஜி மாடலின் விலை ரூ.41,999-ஆக உள்ளது. அதேபோல் பிளிப்கார்ட் தளத்தில் குறிப்பிட்ட சில வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் சலுகைகள் கிடைக்கும்.

இந்த ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம், 120Hz refresh rate உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ரியல்மி ஜிடி 5ஜி சாதனத்தில் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்+ 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல்வேறுஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளதுஇந்த ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன். எனவே விரைவில் இந்த ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

ரியல்மி ஜிடி 5ஜி சாதனத்தில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ,வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோஜாக்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications